thamizham-muthirai01

‘தமிழம் பண்பலை’ தொடங்கும்

பொள்ளாச்சி நசன் வேண்டுகோள்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்

  கடந்த 10 நாள்களாகத் தமிழம்.பண்பலையை வடிவமைப்பதிலேயே, என் முழு நேரமும் கழிந்தது. நேற்றுதான் அதற்கான இறுதிவடிவம் கொடுத்து முழுமைப்படுத்தி இணைத்து உள்ளேன். சிறு சிறு பிழைகள் இருக்கலாம், அவை வரும்காலத்தில் சரி செய்யப்படும்.

  தமிழ் உணர்வுள்ள பாடல்களை வெளியிட்டு இருப்பவர்கள் அருள்கூர்ந்து அந்த இறுவட்டுகளை அனுப்பி வைக்கவும். தமிழம் வலையை தமிழம்.நெட் இணையதளத்திலும் கேட்கலாம். ஆன்டிராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்கள் அதற்கான மென்பொருளை இறக்கி நிறுவிக் கொண்டு தொடர்ந்து கேட்கலாம். ஐபேடு, டேபிளட் உள்ளவர்களும் கேட்கலாம்.

  இசையோடு பாட ஆற்றல் உடையவர்கள் தொடர்பு கொண்டால் அவர்கள் பாடவேண்டிய சங்க இலக்கியப் பாடல்களை வரிசைப்டுத்தி அவர்களுக்கு அனுப்புகிறேன். அவற்றை பாடிப் பதிவு செய்து அனுப்பினால் தமிழம்.பண்பலையில் இணைத்துக் கொள்கிறேன். தமிழ் உணர்வுள்ளவர்கள் இணைவதற்கான தளமாக இந்த பண்பலையைப் பயன்படுத்திக் கொள்ளவும். நம்மக்களிடம் உள்ள கலைகளை நாம் பதிவு செய்து காட்சிப்படுத்துவோம். வரும் தலைமுறையினர் தமிழின் பண்முகம் கண்டு அவர்கள், தங்களை வளர்த்துக் கொள்ளட்டும்.

அன்புடன் பொள்ளாச்சி நசன் –

 pollachinasan@gmail.com

http://www.thamizham.net

பேசி : 97 88 55 20 61

பொள்ளாச்சி நசன்