சென்னை, கலைவாணர் அரங்கில், 

தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017

காலை 10:30 மணிக்கு

நடைபெறும்.  முன்னதாகக்

காலை 9.00மணி முதல் கலைநிகழ்ச்சி நடைபெறும்.

  சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருது பெறுவோர் பட்டியல், வெளியிடப்பட்டது. தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த, தமிழ் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

 இந்த ஆண்டு விருது பெறுவோர் பெயரை, முதல்வர் பன்னீர்செல்வம், வெளியிட்டார்.

விருதாளர் பெயர்களும் பெறும் விருது விவரங்களும் வருமாறு

புலவர் வீரமணி – திருவள்ளுவர் விருது

பண்ருட்டி இராமச்சந்திரன் – பெரியார் விருது

மருத்துவர் துரைசாமி – அம்பேத்கர் விருது

கவிஞர் கூரம் துரை – அண்ணா விருது

 நீலகண்டன் – காமராசர் விருது

பேராசிரியர் கணபதிராமன் – பாரதியார் விருது

கவிஞர் பாரதி – பாரதிதாசன் விருது

 பேராசிரியர் மறைமலை இலக்குவனார் – திரு.வி.க.; விருது

மீனாட்சி முருகரத்தினம் – கி.ஆ.பெ.விசுவநாதம் விருது

  திருவள்ளுவர் திருநாள் விழாவில், முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்குவார்.

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் தலைமை ஏற்பார்.

மீன்வளத்துறை அமைச்சர் செயக்குமார்,

செய்தி-விளம்பரத்துறை அமைசச்சர் கடம்பூர் இராசு,

ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின்

ஆகியோர் சிறப்புரை ஆற்றுவார்கள்.

துறைவிருது பெறுவோருக்கு,  நூறாயிரம் உரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும்,  அகவை முதிர்ந்த, 50 தமிழறிஞர்களுக்கு, நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப்படும்.