அன்புடையீர்!

  வரும் சனவரி மாதம் 14 ஆம்நாள் இலங்கைத் தமிழ்ச் சங்கம், அமெரிக்காவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கமும்  இணைந்து தமிழர் திரு நாளான பொங்கல் திரு நாளை  புதுயார்க்கு/நியூயார்க்கு  அரசி/குயின்சு நகரில் வெகு  சிறப்பாகக்  கொண்டாட  உள்ளன.

  காலையில் தமிழரின்  பண்பாட்டு முறையில் சூரிய வெளிச்சத்தில் பொங்கல் பொங்கும் நிகழ்ச்சி  அனுமான் ஆலயத்தில் நடை பெறும்.

  மாலையில் நாவலர் தமிழ்ப் பாடசாலை சிறுவர் நிகழ்ச்சிகளுடன்   உச்சப்பாடகர்(சூப்பர் சிங்கர்)கள்  வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி  கிளென் ஓக்சு நகரில் உள்ள( ps115)  பாடசாலையில் நடை பெறும்.

  நாடெங்கிலும் தமிழர் திரு நாளான பொங்கல் திரு நாளைக் கொண்டாட இலங்கைத் தமிழ்ச் சங்கம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து முயற்சிகளை எடுத்து வருகிறது.

  தமிழரின்  பரம்பரைத் திரு நாளைக் கொண்டாட வருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

  மேலதிக விவரங்களுக்கு குயின்சு நகரில் உள்ள நாடு கடந்த அரசாங்கத்தின் உறுபினர்களையோ  இலங்கை தமிழ்த் சங்கத்தின் உறுப்பினர்களையோ தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

நாடு கடந்த அரசாங்கம்(அமெரிக்கா)

இலங்கைத் தமிழ்ச் சங்கம்(அமெரிக்கா)