தலைப்பு-யாதுமாகிநின்றாள் : azhai_prathilibi_katturaipoatti_arivippu

 

 வணக்கம்.

‘யாதுமாகி நின்றாள்’ – மகளிர் நாளை முன்னிட்டுப் பிரதிலிபி நடத்தும் அடுத்த போட்டி.

 காலமாற்றத்திற்கு ஏற்பப் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்துப் பெண்களின்/ஆண்களின் பார்வைகள், பெண்ணியம் சார்ந்த கருத்துகள்/மாற்றுக்கருத்துகள், பெண்களின் உடை, உடல், மனம் சார்ந்த அரசியல், அது குறித்த பார்வைகள் எனப் பெண்கள் சார்ந்து எதைக்குறித்தும் எழுதலாம். வாசகர்கள் பரிந்துரைத்த சில தலைப்புகளும் கீழே கொடுப்பட்டிருக்கின்றன. அதை ஒட்டியும் எழுதலாம். தலைப்புகள் பின்வருமாறு :

1) நேற்றைய பெண்கள் பெரும்பாலோரிடம் அதிகம் புகார் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய பெண்கள்? நாளைய பெண்கள்? அவர்கள் நிலை எப்படி இருக்க வேண்டும்?

2) இன்றைய பெண்கள் முன்னேற்றம் என நினைப்பது உண்மையில் முன்னேற்றம்தானா? ஆண்களின் அதிகாரம் பெண்கள் முன்னேற்றத்தைத் தடை செய்கிறதா? அதிகாரப் பரவல் உள்ளதா?

3) இணையம் எந்த அளவு மகளிரை மாற்றியுள்ளது, அதனால் மகளிருக்கும் அவர்களால் மற்றோர்க்கும் உண்டான நன்மை, தீமைகள் என்னென்ன?

கதை, கவிதை, கட்டுரை என எந்த விதமான படைப்புகளையும் அனுப்பலாம்.

  • அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி –tamil@pratilipi.com.

 மின்னஞ்சலின் தலைப்பு – “யாதுமாகி நின்றாள்” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைத்தால் நலம்.

  • படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.
  • சொற்கோப்பில்(MS WORD-இல்) ஒருங்குகுறி எழுத்துருவில் (Unicode font) மட்டுமே படைப்புகளை அனுப்பவும். தமிழில் தட்டச்சு செய்ய (http://www.google.co.in/inputtools/windows/ எனும்) உள்ளீட்டுக் கருவி இணைப்பில் சென்று கூகுள் ஒலி பெயர்ப்பை (google transliteration-ஐ) உங்களது கணினியில் தரவிறக்கம் செய்து தமிழை ஆங்கிலத்தில் தட்டச்சிட்டாலே தமிழில் காண்பிக்கும் (எ.கா ‘kavithai’ என தட்டச்சிட்டால் கவிதை எனக் கீழே காண்பிக்கும்). அல்லது இலதா போன்ற எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.
  • படைப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், எங்களுக்குக் கிடைத்ததை உறுதிப்படுத்த உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம்.
  • பரிசுத்தொகை – முதல் பரிசு – 1,500 உரூ ; இரண்டாம் பரிசு – 1000 உரூ ;

  • மூன்றாம் பரிசு – 500 உரூ.

  • வாசகர்கள் மட்டுமே வெற்றி பெறும் படைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்கள் ( அந்த முறை குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும்.)
  • படைப்புகளை அனுப்பவேண்டிய

  • கடைசி நாள் மார்ச்சு 31, 2016.

தொடர்புக்கு – 9206706899 / 7022370004