மடலேடு-மறைமலையடிகள் கல்விஅறக்கட்டளை ; madaleadu_maraimalaiadigalarakkattalai

தமிழன்புடையீர்

தனித்தமிழியக்கத் தந்தை, பன்மொழியறிஞர் எனப் போற்றப்பெறும் மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம்(1916-2016) நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையில் தமிழ் அறிஞர் பெருமக்களால் தனித் தமிழ்இயக்க நூற்றாண்டு விழா பொலிவுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்பொருட்டு தனித்தமிழ் இயக்கநூற்றாண்டு விழா, திருவள்ளுவராண்டு       2047 கன்னி 09 (25-9-2016) ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு  அடிகளார் வாழ்ந்த பல்லவபுர மாளிகையில் சிறப்பாக நடை பெறவுள்ளது. 

 

அவ்வமயம் புகழ்பெற்ற இக்குடும்பத்தின் பிறங்கடையினர்கள் (வழித் தோன்றல்கள்) கலந்துகொண்டு அடிகளார் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய தொண்டினை மகிழ்வுடன் நினைவுகூர இருக்கின்றார்கள். தமிழ் அறிஞர் பெருமக்களும், ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற அன்புடன் விழைந்துள்ளனர். மறைமலையடிகளார் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டினை உலகெங்கும் பரப்புரை செய்திடும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு  இவ்விழாவில் மறைமலையடிகள் பெயரில் விருதும், பொற்கிழியும் வழங்கிச் சிறப்புச் செய்திடவும் மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா உலகில் பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிற இவ்வேளையில் அடிகளரின் வழித்தோன்றல் களின் உறவினர்கள், எள்ளு, கொள்ளுப்பேரன், பேத்திகள் உள்ளிட்டோர் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழா சீருடனும் சிறப்புடனும் நடைபெற  ஒத்துழைப்பு நல்கிட மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை தூய தமிழன்புடன் வேண்டுகிறது.

மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளையின் வளர்ச்சியில் ஆர்வமுடன் தங்களை இணைத்துக்கொள்ளும் தமிழ் உள்ளங்கள் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு உதவிட விரும்பும் நல் உள்ளங்கள் நேரில் அல்லது வங்கிக் கணக்கில் பணம்செலுத்தி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை

MARAIMALAIADIGAL KALVI ARAKKATTALAI INDIAN OVERSEAS BANK SB.A/CNo.000801000101810–IFSC.IOBAOOOOOO8–Chennai-Avadi(0008)

 

அறக்கட்டளையின் வளர்ச்சிக்குத் தங்களது பங்களிப்பைச் செலுத்திய பிறங்கடையினர்கள், தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் தாங்கள் செலுத்திய தகவலை அறக்கட்டளையின் அறங்காவலர் அ.பேசி. (அ) பகிர்பேசி.(+919840988361) – எண்ணுக்குத் தெரியப் படுத்த வேண்டுகிறோம்,

                                                  தமிழன்புடன்

மறை.தி.தாயுமானவன்

 அறங்காவலர்