பெருங்கவிக்கோ, தங்கர் பச்சான் ஆகியோருக்கு – சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசுகள்
‘ தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டு தோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் விருது’, ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன் உரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசை ‘‘கலைமாமணி’’ தங்கர்பச்சான் பெறுகிறார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (உரூ.2 லட்சம்) இவருடைய ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்குவழங்கப்படுகிறது.
புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள இராணி சீதை மன்றத்தில் சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்தநாள் விழா இலக்கியப் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன் விழாவுக்குத் தலைமை தாங்கி விருது – இலக்கியப் பரிசுகளை வழங்குகிறார்.
விருதிற்கு முற்றிலும் பொருத்தமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களையும் இயக்குநர் தங்கர்பச்சான் அ்வர்களையும் அகரமுதல இதழ் பாராட்டுகிறது.
Leave a Reply