முதல் படத்தைச் சொடுக்கிப் பின் வரிசையாகக் காண்க.

இலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்


பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 மாலை 5.30 மணிக்கு அம்பத்தூர் திருமால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பேரவைப்பாடகர் குழுவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.

ஒருங்கிணைப்பாளர் கவிஞர் செம்பை சேவியர் தலைமை தாங்கினார். செயலர் வரவேற்புரை யாற்றி இணைப்புரைகள் வழங்கினார்.

ஈராண்டில் இலக்குவனார் இலக்கியப் பேரவை
கவிஞர் செம்பை சேவியரின் பழம்பாடலும் பா உரையும்
சே.மில்டனின் மாத்தி யோசி கவிதை நூல்


ஆகியவற்றை எளியோர் ஏந்தல் தோழர் இரா.நல்லகண்ணு வெளியிட்டார்.
புலவர் சிந்தை செயராமன்,

பொறியாளர் இலெ.சுப்பிரமணியன் ஆகிய ஆன்றோர்கள் பெற்றுக்கொண்டனர்.


தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் பின்வருமாறு விருகள் வழங்கி விழா உரையாற்றினார்.

தொல்காப்பியர் விருது: முனைவர் இரா.இராசேந்திரன் (தேவிரா)
திருவள்ளுவர் விருது: முனைவர் இ.எலியாசு
இலக்குவனார் விருது: முனைவர் க.மலர்விழி

திரு ஆ.நடராசன் நன்றி நவின்றார்.