அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!
தமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!
இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600 இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய இந்நன்னாளில் –
திருவள்ளுவரின் 2045 ஆம் ஆண்டுப் பெருமங்கலப் பொன்னாளில் –
இயன்றன ஆற்ற உறுதி கொள்வோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர்
சனவரி 12, கி.ஆ.2014
Leave a Reply