அழை-தாயகம்01 :azhai_thaayakam01

‘யாழ்ப்பாணம், புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவைஅகம்’ அமைப்பின்
‘தாயக நூலகத் திறப்பு விழா!’

  புங்குடு தீவில் (பன்னிரண்டாம் வட்டாரத்தில்) சொக்கலிங்கம் மன்றம் தொடங்கப்பட்டுப் பதினான்காம் ஆண்டு நிறைவு விழாவையும் புங்குடு தீவு ‘தாயகம் குமுகச் (சமூக) சேவைஅகம்’ அமைப்பு தொடங்கப்பட்டு நான்காவது ஆண்டு நிறைவு விழாவையும் முன்னிட்டு ‘புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவையகம்’ அமைப்பினால், புங்குடு தீவு சிரீகணேசக் கல்விக்கூடத்துக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் ‘புங்குடுதீவு தாயகம் நூலகம்’ என்னும் பெயரில் நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.

மேற்படி விழா சித்திரை 17, 2047 / 30.04.2016 சனிக்கிழமை

பிற்பகல் 02:00 (14.00) மணியளவில் தொடங்குகின்றது.

 நிகழ்ச்சி நிரல்

 1. விருந்தினர்கள் வரவேற்பு.
 2. ‘புங்குடு தீவு, தாயகம் குமுகச் சேவையகம்’ அமைப்பின் கொடியேற்றம்.

கொடியேற்றுபவர் : திருமதி த.சுலோசனாம்பிகை, தலைமை ஆதரவாளர், தாயகம் குமுகச் சேவையகம்.

 1. இறை வணக்கம்.
 2. ‘தாயகம் நூலகக் கட்டடம்’ திறந்து வைத்தல்.

திறந்து வைப்போர்:  திரு.பாலச்சந்திரன் கசதீபன், வட மாகாண அவை உறுப்பினர், திரு.விந்தன் கனகரத்தினம், வட மாகாண அவை உறுப்பினர்..

 1. வரவேற்பு நடனம்.
 2. வரவேற்புரை.

செல்வி செகநந்தினி முத்துக்குமார், அறிவுரை அவை உறுப்பினர், தாயகம் குமுகச் சேவையகம்..

 1. வாழ்த்துரை.

பரமத்திரு. முரளிசர்மா, இந்து சமய ஆசான்..

 1. தலைமையுரை.

திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை, தலைமை ஆதரவாளர், தாயகம் குமுகச் சேவையகம்.

 1. கோலாட்டம்.
 2. சிறப்பு விருந்தினர் உரை

சிறப்பு விருந்தினர்கள்:

திரு.நமசிவாயம் கமலராசா, புங்குடு தீவு தலைமை அஞ்சல் அலுவலர்.

திரு.அருணாசலம் சண்முகநாதன், குமுகச் சேவையாளர், புங்குடுதீவு.

திரு.பரமலிங்கம் தர்சானந்து, நல்லூர்ப் பகுதி நாட்டுப்புறச் சேவையாளர்.

திரு.சி.சாந்தகுமார், நேசன் புடவை அகம், புங்குடுதீவு.

திரு.கு.கைலைமலைநாதன், புங்குடுதீவு நலன்விரும்பி – சுவிசு இலீசு.

 1. மைனா நடனம்
 2. சிறப்பு விருந்தினர்கள் உரை

சிறப்பு விருந்தினர்கள்:

திரு.எசு.கே.சண்முகலிங்கம், தவிசாளர் வேலணை பகுதி நடுவர் அவை, தாயகம் குமுகச் சேவையகத் தலைமை அறிவுரைஞர்.

திரு.கு.விசயகுமார், பொறுப்பு அலுவலர், புங்குடுதீவு அவை.

 1. சிறப்புரை

செல்வி பவிசானா, தலைவர், தாயகம் குமுகச் சேவையகம்.

 1. தலைமை விருந்தினர்கள் உரை

தலைமை விருந்தினர்கள்:

திரு.பாலச்சந்திரன் கசதீபன், வட மாகாண அவை உறுப்பினர்,

திரு.விந்தன் கனகரத்தினம், வட மாகாண அவை உறுப்பினர்

 1. நன்றியுரை

செல்வி காஞ்சனா, செயலாளர், தாயகம் குமுகச் சேவையகம்.

**ஊர்தி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது** (தொலைவான இடங்களில் இருந்து வரும் மாணவ மாணவிகள் உட்பட பொதுமக்கள் அனைவரது நன்மை கருதி, புங்குடு தீவு சித்தி விநாயகர் கல்விக்கூடத்துக்கு முன்பக்கம் பகல் 01:30 மணிக்கு ஊர்தி புறப்படும்).

 

‘புங்குடுதீவு தாயகம் நூலகம்’ திறப்பு விழாவன்று நடைபெறும் முதன்மை நிகழ்வுகள்!

**புங்குடுதீவு ஈசுடர்ன் விளையாட்டுக் கழகத்திற்கான அன்பளிப்பு

வழங்குநர்: சுவிசு ‘இலீசு இளம் சுடர்’ (lease young star) விளையாட்டுக் கழகம்.

**புங்குடுதீவு சிரீராசராசேசுவரி பள்ளி மாணவர்களுக்கான உதவி

வழங்குநர்: சுவிசு இலீசு மாநிலத்தில் வாழும் புங்குடுதீவு சண்முகநாதன் கல்விக்கூடத்தின் பழைய மாணவர்கள்.

**தாயகம் குமுகச் (சமூக) சேவையகத்தின், ‘சொக்கலிங்கம் மன்ற’த்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்க்குச் சிறப்புச் செய்தல்

வழங்குநர்: செல்வி பரஞ்சோதி செல்வநிதி அவர்களின் நினைவாக, சுவிசு சூரிச்சில் வாழும் திரு., திருமதி பன்னீர்ச்செல்வம் சிவநிதி குடும்பம்.

**புங்குடுதீவு சிரீராசராசேசுவரி பள்ளி மாணவ, மாணவியர்க்கு வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்ட சான்றிதழ் வழங்குதல்

வழங்குநர்: ‘சுவிசுராகம் உதவும் கரங்கள்’ – சுவிசு.

**தாயகம் நூலகத் திறப்பு விழாவினை முன்னிட்டு புங்குடுதீவின் எல்லாப் பள்ளிகளையும் சேர்ந்த மாணவ, மாணவியர்க்காக நடைபெற்ற பொது அறிவுப் போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவ, மாணவியர்க்கான பரிசளிப்பு விழா

வழங்குநர்: புங்குடுதீவு ‘தாயகம் குமுகச் சேவையகம்’.

குறிப்பு:

மேற்படி ‘தாயகம் நூலகம்’ அமைப்பிற்குரிய முழுமையான செலவினைப் ‘புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவையகம்’ பொறுப்பெடுத்துள்ளது.

அத்துடன் ‘தாயகம் நூலகம்’ திறப்பு விழாவுக்குரிய செலவினை மறைதிரு. சொக்கலிங்கம் நாகேசு இணையரின் பேரப்பிள்ளைகளான செல்வி தேனு, திருமதி செனனி, இணையரின் மூத்த புதல்வர் கருணைலிங்கம் (கண்ணன் – இலண்டன்) ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு முறையே உயோகலிங்கம் (பாபு – இலண்டன்) குடும்பமும், மருத்துவர் செனனி தயாபரன் (இலண்டன்) குடும்பமும், கருணைலிங்கம் (கண்ணன் – இலண்டன்) அவர்களும் வழங்கினர்.

அதே சமயம், மறைதிரு.செல்லத்துரை சிவக்கொழுந்து ஆகியோரின் நினைவாக, கொழும்பு புதுச்செட்டித் தெருவில் வாழும் செல்லத்துரை சிதம்பரநாதன் அவர்கள் பத்தாயிரம் (Rp.10,000) உரூபாய் பெறுமதியான நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.

அதே போன்று, ஊரைத் தீவைச் சேர்ந்த மறைதிரு.சுப்பிரமணியம் – மீனாட்சி அவர்களின் நினைவாக கனடாவில் வாழும் சுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் ஐயாயிரம் (Rp.5,000) உரூபாய் பெறுமதியான நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.

அழை-தாயகம்02 : azhai_thaayakam02 அழை-தாயகம்03 :azhai_thaayakam03

இங்ஙனம்

திருமதி த.சுலோசனாம்பிகை,
தலைமை ஆதரவாளர்
,
‘தாயகம் குமுகச் சேவை அகம்’, புங்குடுதீவு.