ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1567-1576: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1557-1566இன் தொடர்ச்சி)
1567. முள்ளியியல் சிலர் எடையியல் என்கின்றனர். முட்செடிகள் பற்றிய ஆராய்ச்சித்துறையை எடையியல் என்பது பொருந்தாது. எனவே முட்செடி – முள்ளி குறித்த இயலை முள்ளியியல் எனலாம். | Batology |
1568. முறிவியல் எலும்பு முறிவு குறித்த இயல். சுருக்கமாக முறிவியல் எனப்பட்டது. | Agmatology |
1569. முறிவு விசையியல் | Fracture Machanics |
1570. முறைக்காய்ச்சலியல் இத்தாலியச்சொற்களான mal- என்பதற்குத் தீய என்றும் aria என்பதற்குக் காற்று என்றும் பொருள். malaria என்னும் காய்ச்சல் நோயை, நச்சுக்காய்ச்சல், மலைச்சுரம், நாலாமுறைக் காய்ச்சல், நளிர், மேகசுரம், மூன்றாமுறைக் காய்ச்சல், மலைக் காய்ச்சல், மலேரியா, மலேரியக் குளிர் காய்ச்சல், மலேரியா காய்ச்சல், முறைக் காய்ச்சல், மலேரியா நோய், சீதபித்தசுவரம், முறைச்சுரவகை, எனப் பலவகையாகக் கூறுகின்றனர். ஒலி பெயர்ப்பில் மலோியா எனத் தொடக்கத்தில் கூறி ஓரளவு நிலைத்துவிட்ட சொல்லை நாம் கைவிடலாம். நச்சுக் காய்ச்சல் என்பது பொதுவான சொல்லாக உள்ளது. பிறவற்றில் இப்பொழுது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் முறைக்காய்ச்சல் என்பதையே நாம் பயன்படுத்தலாம். நளிர் என்றால் குளிர் எனப் பொருள். குளிர்க்காய்ச்சலையும் குறிக்கிறது. எனவே, மலேரியா எனப்படும் முறைக் காய்ச்சலையும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர். ஆனால், கொசுவால் பரவாமல் குளிரால் பரவும் குளிர்க் காய்ச்சலும் உள்ளதால் அச்சொல்லை இந்த இடத்தில் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. | Malariology |
1571. முறைமை வளைசலியல் | Systems Ecology |
1572. முறைமைக் காப்புப் பொறியியல் | System Safety Engineering |
1573. முறைமைப் பொறியியல் | Systems Engineering |
1574. முறைமை யியல் | Systematology |
1575. முற்கூறலியல் khrēsmología என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முற்கூறல். | Chresmology / Chrismology |
1576. முனைப்படு வரைவியல் | Polarography |
(தொடரும்)
Leave a Reply