(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1577-1586 இன் தொடர்ச்சி)
1587. மூடுபனி இயல்
miasma என்னும் பழங் கிரேக்கச்சொல் படலத்தைக் குறிக்கிறது. பொதுவாகத் தூசிப்படலம் அல்லது புகைப் படலத்தைக் குறிக்கிறது. எனினும் இங்கே அவற்றுக்குக் காரணமாக அமையக்கூடிய – காற்றுமாசினை உருவாக்கும் பனிப்படலத்தை – மூடு பனியைக் குறிக்கிறது. எனவே, மூடுபனியியல் எனக் குறித்துள்ளோம்.
Miasmology
1588. மூட்டியல்Arthrology
1589. மூட்டுநோயியல்Arthropathology / Arthropodology
1590. மூதுரையியல்
gnṓmē என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மூதுரை.
Gnomology
1591. மூத்தோர் பல்லியல்Gerodontology
1592. மூப்பு உளவியல்Geropsychology / Nostology
1593. மூலக்கூறு இயங்கியல்
molé+cule என்பதற்குப் பிரெஞ்சில் மூலக்கூறு எனப் பொருள்.
Molecular Dynamics
1594. மூலக்கூறு மரபியல்Molecular Genetics
1595. மூலக்கூறு மின்னணுவியல்Molecular electronics
1596. மூலக்கூறு வரைவியல்Molecular Graphics
1597. மூலக்கூறு விசையியல்Molecular Mechanics
1598. மூலக்கூற்று இயற்பியல்Molecular Physics
1599. மூலக்கூற்று உயிரியியல்Molecular Biology
1600. மூலக்கூற்று ஏமவியல்Molecular Immunology  

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000