(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1651 -1660இன் தொடர்ச்சி)
1661. வரைவியநிலையியல்Graphical statics
1662. வரைவியல்Graphics
1663. வலிப்பகற்றியல்Anti Epileptics
1664. வலிப்பியல்Epileptology
1665. வலிவுபரப்புருவியல்
Topology என்பது திணையியலைக் குறிப்பினும் கணக்கியலில் பரப்புருவைக் குறிக்கிறது. எனவே, உறுதித் திணையியல்       என்பது பொருந்தாது.
Strong Topology
1666. வலைம இணைப்பியல்Network topology
1667. வழமைத் தொன்மவியல்Common mythology
1668. வழிபாட்டியல்Liturgiology
1669. வளங்காப்பு உயிரியல்Conservation biology
1670. வளைச நஞ்சியல்
Ecotoxicology – சுற்றுப்புற நச்சியல், சூழல் நச்சியல் எனப்படுகின்றது.  Eco – வளைசல்; toxicology – நஞ்சியல் என வகைப்படுத்தி யுள்ளமையால் வளைச நஞ்சியல் – Ecotoxicology எனலாம்.      
Ecotoxicology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000