(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1681-1690 இன் தொடர்ச்சி)

1691. வளைவரை
தட்பியல் காண்க : தட்பியல்-Climatology
Dendroclimatology
1692. வறுமையியல்
ptōkhós என்னும் பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் வறுமை.
Ptochology
1693. வனைமுறை  இயங்கியல்  
Process செயல்முறை, நடைமுறை, செயலாக்க முறை, செயல் முறைக்குள்ளாக்கு, முறைப்படுத்து, படிமுறை, பதனம் செய், செலுத்தம்  எனப் பலவாறாகக் கூறுகின்றனர். படிப்படியாக நிகழ்விக்கும் செயல்பாட்டை மட்கலங்கள் செய்யப்படும் வனைதல் முறையுடன் ஒப்பிடலாம். மண்பானை செய்யத் துணை நிற்கும் சக்கரத்தை வனை கலத்திகிரி எனச் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. வனைதல் என்றால் உரு அமையச்செய்தல் எனப் பிங்கல நிகண்டு கூறுகிறது. எனவே, Processing  என்றால் வனைதல் எனலாம். இடத்திற்கேற்றவாறு இச்சொல் வனைமம் என்றும் வனைவம் என்றும் வனைவி என்றும் மாறுகிறது. செருமனியில் நடைபெற்ற ஐந்தாவது இணையத் தமிழ் மாநாட்டில்(அட்டோபர் 2009) கணிணிச்சொற்கள் குறித்து நான் அளித்த கட்டுரையில் இவ்வாறு பல சொற்களை உருவாக்கிக் காட்டியுள்ளேன். எனவே, வனைதல்  எனலாம். இதனடிப்படையில் வனைமுறை  இயங்கியல் –  Process Dynamics எனலாம். எனினும் Fish processing technology என்னும் பொழுது மீன் பதன நுட்பியல் எனலாம். பதனம்  – processing(2) (மீனியல்)
Process Dynamics
1694. வனைமப்பொறியியல்  
காண்க: வனைம இயங்கியல்  குறிப்பை; process re-engineering என்னுமிடத்தில்பொறியியலைக்குறிக்கவில்லை. மறுசீரமைப்பைக்குறிக்கிறது.
Process Engineering
1695. வாட்டிகனியல்Vaticanology      

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000