(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1691 – 1695 இன் தொடர்ச்சி)

1696. வாந்தியியல்
Eméō> emeto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் வாந்தி எடுத்தல். 
Emetology 
1697. வாயு
Aero வாயு, வான், காற்று, வான, வானூர்தி, விமான என்னும் பொருள்களில் பயன்படுத்துகிறது. காற்று என்பதையும் காற்று வழங்கும் வானத்தையும் வானத்தில் பறக்கும் வானூர்தி யையும் இடத்திற்கேற்பப் பயன்படுத்தலாம். வாயு என்பதும் தமிழ்ச்சொல்லே. வாய் என்றால் நிறைதல் என்றும் பொருள். எங்கும் நிறைந்துள்ளதால் காற்று என்பதற்கு வாயு என்றும் பெயர் வந்தது. Air – காற்று என்றும் Aero – வாயு என்றும் வகைப்படுத்திக் கொள்ளலாம். ஒரே பொருள்தான் என்றாலும் தனித்தனிப் பயன்பாட்டிற்கு இவ்வகைப்பாடு உதவும்.
Aero
1698. வாயு இயங்கியல்Aero dynamics
1699. வாயு உயிரியல்         Aerobiology
1700. வாயுப் பூந்தாதியல்
வாயுமண்டலத்திலுள்ள பூந்துகள்/ பூந்தாது, வித்துகள் பற்றிய ஆய்வியல். எனவே,  அகராதிகளில் குறிப்பிட் டுள்ளவாறு, சூழ்ப் பூந்துகளியல்  என்று சொல்லாமல் வாயுப் பூந்தாதியல் எனலாம். Palynology என்பதைப் பூந்தாதியல் என வரையறுத்துள்ளதால் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காண்க: பூந்தாதியல்    
Aeropalynology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000