ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1712 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1707-1711 இன் தொடர்ச்சி)
1712. வானகவியல் Astronomy – வானியல், வானசாத்திரம், ககோளசாத்திரம், வான நூல், வான வியல், வானவியல் வான நூல், வானூல், வான்கோள ஆய்வியல், விண்ணியல், கணிதசாத்திரம், சோதிட நூல், காலக்கணிதம், காலக் கணனம்பற்றிய வானசாத்திரம், சோதிசாத்திரம் எனக் கூறப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவற்றுள் வானியல் என்பதையும் கணனம்(சோதிடம்) என்பதையும் Astronomy குறிப்பிடுகிறது. Ástron என்னும் கிரேக்கச் சொல்லுக்கு வானிலுள்ள பொருள்கள் எனப் பொருள். அஃதாவது, கோள்கள், நட்சத்திரங்கள் முதலியவை. Astrologia என்னும் இலத்தீன் சொல்லிற்கும் அதேபொருள்தான். எனினும் நடைமுறையில் வான்பொருள்கள் கூறுவன எனப் பொருளாகிறது. வான்பொருள்களைப்பற்றிய ஆராய்ச்சி வானியல் – Astronomy. வான் பொருள்கள் நமக்குக் கூறுவதாகக் கருதப்படும் நன்மை தீமைகள் குறித்த ஆராய்ச்சி கணனவியல் – Astrology இவற்றுள் வானியல் – Astronomy(1) கணனவியல் – Astronomy (2) என இரண்டும் பொருந்தி வருவனவாக உள்ளன. ஆனால், Meteorology என்பதையும் வானியல் என்றே அனைவரும் கையாள்கின்றனர். (நாம் வானிலையியல் எனக் குறிக்கிறோம்.) Astronomy வானகத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவற்றைப்பற்றி விவரிக்கும் துறை. எனவே, வானியலில் – Meteorology இருந்து வேறு படுத்த வானகவியல் எனலாம். அதுபோல், Astrology என்பதைக் கணனவியலாக வரையறுத் துள்ளதால் Astronomy என்பதைக் கணனவியலாகப் பயன் படுத்துவதைத் தவிர்க்கலாம். வானகவியல் என்று மட்டுமே குறிக்கலாம். | Astronomy(1) |
(தொடரும்)
Leave a Reply