ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 421 – 430 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 404 – 420 இன் தொடர்ச்சி)
421. ஓடிலி யியல் | Limacology |
422. ஓட்டுடலியல் | Crustaceology / Malacostracology |
423. ஓமரியல் | Homerology |
424. ஓய்வறை எழுத்தியல் | Latrinology |
425. ஓரையியல் hōra என்னும் இலத்தீனில் இடம் பெற்ற பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நேரம்/ காலம். எனவே, கால அளவியல் என்றும் நேர அளவையியல் என்றும் குறிப்பிடுகின்றனர். ஓரா என்னும் கிரேக்க/ இலத்தீன் சொல்லின் மூலம் தமிழ்ச்சொல்லான ஓரை. “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கில்லை” என்கிறார் தொல்காப்பியர். “விடி வோரையி லெழுந்து” (குருபரம்.115.பன்னீ.) என்னுமிடத்தில் நேரம் என்னும் பொருள் வருகிறது. பிற இலக்கியங்களிலும் இச்சொல்லைக் காணலாம். எனவே, நாம் ஓரையியல் என்றே கூறலாம். ‘ஓரை’ எனச் சங்கக் காலத்தில் மகளிர் தனித்தும் ஆடவருடன் இணைந்தும் விளையாடும் விளையாட்டும் இருந்துள்ளது. இந்த இடத்தில் நேரம் என்னும் பொருளில்தான் நாம் கையாண்டுள்ளோம். | Horology |
426. கசகசாப் பாலியல் | Meconology |
427. கசிவியல் | Eccrinology |
428. கடப்பாட்டியல் | Comitology |
429. கடப்பாட்டு அறவியல் | Normative ethics |
430. கடமை யியல் Deontology- கடப்பாட்டியல், கடமையியல், கடமை இயல், கடமை இயல் ஒழுக்க நூல், அறநெறியியல், மருத்துவ ஒழுக்கவியல், கடமை நடை முறையியல் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகிறது. Deon என்பது பழங்கிரேக்கத்தில் கடப்பாடு என்னும் பொரு ளுடையது. 19 ஆம் நூற்றாண்டில் கடப்பாட்டிற்குரிய நன்னெறியையும் குறிக்கலாயிற்று. எனவே, நாம்பொதுவாகக் கடமையியல் – Deontology (1) அறவியலில் அறநெறியியல் – Deontology (2) மருத்துவ இயலில் மருத்துவ ஒழுக்கவியல் – Deontology (3) என்று வகைப்படுத்திப் பயன்படுத்தலாம். அறநெறியியலில் ethics எனத் தனியாக உள்ளதால் அதனை இப்பொருளில் பயன்படுத்துவதி லிருந்து விலக்கி விடலாம். | Deontology(1) |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
Leave a Reply