(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 21-43 இன் தொடர்ச்சி)

44. அலையியல்

Tidology

45. அல்பேனியரியல்

Albanology

46. அழகெழுத்து வரைவியல்

பிரெஞ்சுச் சொல்லின் மூலமான kállos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அழகு. +  gráphō  என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எழுத்து. எனவே, kalligraphía என்பது அழகான எழுத்தைக் குறிக்கிறது.          

Calligraphic graphics

47. அழிப்புநுட்பியல்

Terminator Technology

48. அழுத்த இயங்கியல்

Barodynamics

49. அளபுரு நீரியல் 

Parametric Hydrology

50. அளவறிபுவிவடிவியல்

Quantitative Geomorphology

51. அலகியல்

 

Metrology – அலகியல், அளவியல், எடை அளவுகள் ஆய்வியல், எடை அளவுகள் இயல், எடை அளவியல், அளவீட்டியல் எனப்படுகின்றது.

métron என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் அளவிடு. எனினும் ஐரோப்பிய அகராதி குறிப்பிடும் அலகியல் என்பதே சுருக்கமாக உள்ளது.

Metrology(1)

52. அளவையியல்(2)

 

அளவை இயல் அறிவைப் பெறுவதற்கான வாதங்களை அடிப்படையாகக் கொண்ட தருக்கக்கலையைக் குறிப்பிடும். ஆதலின், அளவையியல் என்பது ஏரணவியல்/ தருக்கவியல்/logic என்னும் பொருளையும் குறிக்கும். எனவே, எடை அளவியல் என்னும் பொருளில் இச்சொல்லைக் கையாள்வது குழப்பத்தைத் தரும்.

Metrology(2)

 

53. அளவைப்பொருளியல்

Econometrics

54. அளவியல்

 

Mensuration – அளத்தல், அளவியல், அளவையியல், வடிவ அளவியல் எனப்படுகின்றது.

அளவையியல் என்றால் தருக்கவியல் எனத் தவறாகப் பொருள் கொள்ள நேரிடும். எனவே, அதனைப் பயன்படுத்த வேண்டா.  Mensuration என்னும் பிரெஞ்சு / இலத்தீன் சொல்லின் பொருள் அளத்தல். Mensuration-மாதவிடாய்/ மாதவிலக்கு என்னும் பொருள்கள் இருப்பினும் இங்கு அளப்பதையும் கணக்கியலில் வடிவ அளவையை யும் குறிக்கிறது.

அளப்பது குறித்த / அளவு குறித்த இயல் என்பதால் அளவியல் – Mensuration எனலாம்.  காண்க: அலகியல்– Metrology(1)

Mensuration

55. அறக்கருத்தாய்வியல்

Meta Ethics

56. அறவியல்

 

Ethics- அறவியல், ஒழுக்கவியல், அற இயல், அறநெறி, அறநெறியியல், அறமுறை, அறவியல், ஒழுகலாறு, ஒழுக்கமுறை, ஒழுக்காற்றியல், ஒழுக்காறு, நன்னெறி, நன்னெறி யியல், நன்னெறி யுடைமை எனப் பலவாறாகக் கூறப்படுகிறது. சுருக்கமான

அறவியல் – Ethics  என்பதே குறிக்கப்பட்டுள்ளது.   

Ethics

57. அறிகைஉளவியல்

Cognitive Psychology – அறிகை உளவியல், அறிதல்சார் உளவியல், அறிதிற உளவியல், அறிதிறன் உளவியல், அறிவாற்றல் உளவியல் எனப்படுகிறது.

Cognitive – அறிதகு, அறிதல்சார், அறிதிற, அறிவாற்றலுடைய, தெரிவுசார், புரிந்துகொள்ளும் எனப்படுகின்றது.

cognitive என்னும் இலத்தீன்சொல்லிற்கு “நான் அறிவேன்” எனப் பொருள்.

இவற்றுள் சுருக்கமான அறிகை உளவியல் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது.

Cognitive Psychology

58. அறிதிறன் மரபியல்

Intelligence Genetics

59. அறிதுயிலியல்

Hypnotic

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000