(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  803 – 819 இன் தொடர்ச்சி)

820. தாவரமருந்தியல்

 Ethnopharmacology என்பதன் நேர் பொருள் தாவரமருந்தியல்  என்பதுதான். ஆனால், இத்துறை பெரும்பான்மை தாவரங் களுக்கும் சிறுபான்மை விலங்கு களுக்குமான மருந்து குறித்த இயல். எனவேதான் தாவர மருந்தியல் எனப்படுகிறது.

Ethnopharmacology

821. தாவரவியல்

Botany

822. தாழ் ஆற்றல் இயற்பியல்

Low energy physics

823. தாழ் ஓசையியல்

கீழ் ஓசையியல் என்றும் கூறுவர். அதனினும் தாழ் ஓசையியல் என்பது ஏற்றதாக இருக்கிறது.

Infrasonics- அகச்சிவப்பு என்றும் பொருள் உண்டு. இந்த இடத்தில் பொருந்தாது.

Infrasonics

824. தாழ் நுட்ப எந்திரன்   

Low Technology Robot

825. தாழ் மட்ட நுட்பியல்

 low level of technology

826. தாழ் வெப்ப இயற்பியல்           

Low Temperature Physics

827. தானியங்கிப் பொறியியல்

Automotive engineering

828. தான்மை உளவியல்

காண்க : தான்மை – Ego

Ego psychology

829. தான்மை யியல்

Ego – என்பதற்கு அகந்தை, அகம், நான், ஆணவம், நான்மை, சுயம், வீம்பு, தன்முனைப்பு, தன்னைப்பற்றிக் கொண்டிருக்கும் எண்ணம், நானுணர்வு, பெருமை, திமிர் பிடித்த எனப் பலவாறாகச் சொல்லப்பட்டாலும் வேறு பொருள் கொண்டனவாக உள்ளன. சுயம் தமிழில்லை. நான்மை என்பது நான் என்னும் சொல்லை உணர்த்தாமல் நான்மணிக்கடிகை போல் நான்கு என்னும் சொற் பொருளையே முன்னிருத்து கின்றது.

 தினமணி சொல் தேடல் பகுதி(21)இல் என்.ஆர். சத்தியமூர்த்தி, மன்ற வாணன் ஆகியோர் குறிப் பிட்டுள்ளதாகவும் தன் கருத்தும் இதுதான் என்றும் முனைவர் தெ.ஞானசுந்தரம்  தான்மை எனக் குறிப்பிட்டிருப்பார். தான் என்னும் முனைப்பான எண்ணமாக இருந்தாலும் அகந்தையாக இருந்தாலும் தான்மை என்பதே சரியான சொல் என்பதால் கையாளப்பட்டுள்ளது.

Egology

830. திணைத் தாவர இயல்

Floristics

831. திணைப்படவியல்

Mapology

832. திணையியல்

Topology 1

833. திண்பொருள் இயங்கியல்

Rigid Body Dynamics

834. திண்ட நோயியல்

disque என்னும் பிரெஞ்சுச் சொல்லில் இருந்து disc உருவானது. இலத்தீன் சொல்லான discus என்பதில் இருந்துதான் பிரெஞ்சுச் சொல் உருவானது.

Disc/Dish/Disk  என்பன வற்றைப் பெரும்பாலும் வட்டு என்றும் சிறுபான்மை தட்டு என்றும் குறிக்கின்றனர்.

வட்டு என்பது சூதாட்ட வட்டுக்கருவி, எறிந்து விளையாடும் வட்டு, கருப்பட்டிக் கட்டி, நீர் எறி கருவி, பாண்டி ஆட்டத்தில் பயன்படும் நெல்லி வட்டு, கண்ட சருக்கரை, கத்தரி வகை, வட்டில், சிறு துணி, வட்டமான பொருள், திரட்சியான பொருள் எனப் பலவற்றைக் குறிக்கும். இங்கே முதுகெலும் பிடையே உள்ள முள்ளெலும்புகளைக் குறிக்கும்.

எனினும் முள்ளெலும்பினை இவ்வாறு கூறுவது சரியான புரிதலைத் தராது. வடிவ அடிப்படையில் ஒத்துள்ள முள்ளெலும்பு என்பதைப் பொதுச்சொல்லாகப் பயன்படுத்துவதால் வேறு சொல்லைக் குறிப்பிட வேண்டியுள்ளது. முதுகெலும்புகள் இடையே திண்டு போல் பயன்படுவதால் அதன் அடிப்படையில் திண்டம் எனலாம்.

Disc Pathology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000