ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 850 – 854 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 இன் தொடர்ச்சி)
நில நடுக்கம் தொடர்பான ஆராய்ச்சித் துறையான உலகளாவிய நகர்வியல்/ இளம் உலகிய நகர்வியல்/ புது உலகளாவிய பாறை அமைப்பியல் (New Global Tectonics) என்று தனியாகக் கூறாது அதனையும் இத் துண்ட நகர்வியலில் சேர்த்து விடலாம். |
Plate tectonics |
|
851. துணைக் காலவியல் Parachronology – அடுக்கமைப்புக் காலக் கணிப்பியல், காலக் கண்ணாடி யியல், புவிக்கால வரிசையியல் எனப்படுகின்றது. Chronology காலயியல் என்கிறோம். Para மேலே, அப்பால், அருகில், உடன்; முழுவதும், இயல்பு அல்லாத (அசாதாரண), தவறான, ஒத்த, இணை, துணை என்னும் பொருள்களை உடைய முன்னொட்டுச் சொல். எனவே, துணைக்காலவியல் Parachronology எனலாம். |
Parachronology |
|
852. துதிப்பாவியல் மூலச்சொல்லான hymnus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் húmnos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருளும் (சமயம் சார்ந்த) போற்றிப்பாடல்கள்/வாழ்த்துப்பாடல்கள் ஆகும். கடவுளைத் துதிக்கும் பாடல்கள் சுருக்கமாகத் துதிப்பா எனப்பட்டது. |
Hymnology |
|
853. தும்பியியல் odoús என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் பற்கள். கீழ்த்தாடையில் பற்கள் உடைய தட்டான் (dragonfly), ஊசித் தட்டான் (Damselfly) ஆகியவற்றை Odonata குறிப்பிடுகிறது. பொதுவாகத் தும்பிகள் குறித்த இயல் என்னும் பொருளில் தும்பியியல் எனப்பட்டது. |
Odonatology |
|
854. துயிலியல் Hypho என்பது வலைபோல் என்னும் பொருளிலான ஒட்டுச் சொல்லாகும். Hyphology என்பது வலைநிலைப் பொருளை வேதியியலில் குறிக்கிறது. எனினும் தவறுதலாக Hypnology எனக் கருதி Hyphology – துயிலியல் அல்லது தூக்க இயல் என்று சில அகராதிகளில் குறிப்பிடப்படுகின்றன. |
Hypnology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
Leave a Reply