ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1018-1021 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 995 -1017இன் தொடர்ச்சி)
1018. நீர் வள இயல் Fluviology – நீர்நிலையியல், நீர்வழி யியல், ஆற்றியல் எனக் குறிக்கப் பெறுகிறது. Limnology – நன்னீரியல், ஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி, குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு, ஏரியியல், நன்னீர் உயிரியல், நீர்நிலைகளியல் எனக் குறிக்கப் பெறுகிறது. நீர் என்றால் நாம் சாக்கடை நீரைக் கருதுவதில்லை. நீர் நிலைகளின் நீர் தூய்மையாக இருப்பதில்லை. எனவே, நன்னீர் என்ற குறிப்பு இங்கே தேவையில்லை. Limno எரி, குளம், குட்டை எனப் பொருள்கள். Limnology என்றால் நீர்வள அறிவியல் எனப் பொருள். Fluviology, Limnology இரண்டும் ஒரு பொருள் குறித்தன. எனவே, பொதுவாக நீர் வள இயல் எனலாம். இவ்வாறு குறிப்பிடும் பொழுது நீர்நிலைகளுடன் நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களையும் குறித்ததாக அமையும். நீர் வள இயல் – Fluviology / Limnology எனலாம். Hydrology என்பதே நீரியல். எனவே, இங்கே நீரியல் எனக் குறிக்கப்பெறவில்லை. |
Fluviology/ Limnology |
1019. நீள்தடப் பொறியியல் |
Long-Lines Engineering |
1020. நுட்பஅறிவுப் பொறியியல் அறிவு சார்ந்த அமைப்புகளை உருவாக்குதல், பேணுதல், பயன்படுத்துதல் ஆகிய அனைத்துத் தொழில் நுட்ப, அறிவியல், குமுக இயல்புகளைக் குறிக்கிறது. நேர் பொருள் அறிவுப் பொறியியல் என்றாலும் வரையறைக் கிணங்க, நுட்ப அறிவுப் பொறியியல் எனப் பட்டது. |
Knowledge Engineering |
1021. நுட்பச் சொல்லியல் orismos என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் வரையறை. Logos என்னும் பழங் கிரேக்கச்சொல் இந்த இடத்தில் சொல் என்னும் பொருளுடையது. இருப்பினும் கலைச்சொற்கள் அல்லது நுட்பச்சொற்களைப் பற்றி மட்டுமே ஆராய்கிறது. எனவே, நுட்பச் சொல்லியல் எனப்பட்டது. |
Orismology |
(தொடரும்)
Leave a Reply