(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1121 – 1141 இன் தொடர்ச்சி)

1142. பண்டைய மீனியல் 

Paleoichthylogy

1143. பண்டைய வானிலையியல்

Paleometeorology

1144. பண்டைய விலங்கியல்

Palaeozoology/Paleozoology

   

1145. பண்டைய நோயியல்

Paleopathology

1146. பண்பாட்டியல்

Culturology

1147. பண்பாட்டு இயங்கியல்

Cultural Dynamics

1148. பண்பாட்டு மானிடவியல்

Cultural anthropology

1149. பண்பாட்டுக் குமுகவியல்

Sociology of culture

1150. பண்பாட்டு வளைசலியல்

Cultural ecology

1151. பண்பார் உயிரியல்

Ctetology

1152. பதனம்  

காண்க: Process Dynamics – வனைமுறை  இயங்கியல்

Processing(2) (மீனியல்)

1153. பதின் பாரம்

Metric ton

1154. பத்தியவியல் 

Sitology

1155. பந்தனவியல்

இணைத்தல், கட்டுதல் தொடர்பான அறிவியல். பந்தனம் என்றால் கட்டுதல் எனப் பொருள். இணைத்தலியல் என்றாலோ பிணைத்தலியல் என்றாலோ முறையே Topology, Connectology என்பனவற்றைக் குறிக்கும். எனவே, பந்தனவியல் எனக் குறித்துள்ளேன்.

Zygology-சினைமுட்டையியல் என்றும் குறித்திருந்தேன். சரி பார்க்கும் பொழுது இதற்கான மூலக்கோப்பு கிடைக்கவில்லை. உறுதிப்படுத்த இயலாமையால் நீக்கிவிட்டேன்.

Zygology

(தொடரும்) 

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000