ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1156 -1171 இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1142-1155 இன் தொடர்ச்சி)
1156. பயன்நெறி மெய்யியல் Philosophy – மெய்யியல். Utilitarian – பயன்நோக்கிய, நலப்பயன்சார், நுகர்பயன்சார், பயண முதற் கொள்கையினர், பயனெறி முறைக் கோட் பாட்டாளர், பயன் முதற் கொள்கையர், பயன்நெறி முறையர், பயன்பாட்டு நோக்கு சார் எனப்படுகின்றது. இங்கே உயர்திணையில் குறிக்கப் பெறவில்லை. எனவே, அஃறிணையில் பயன்நெறி மெய்யியல் Utilitarian Philosophy எனலாம். |
Utilitarian Philosophy
|
1157. பயன்படு கணக்கியல் |
Applicable mathematics |
1158. பயன்மை Applied – பயன்பாட்டு, பயன்படு, நடைமுறை, விளைவியல், பயனுறு, உள், பயன்முறை, பொருத்தப்படும், செலுத்திய, செயல்முறை சார்ந்த, கொடுக்கப்படும், பயன் முறைசார், பிரயோக, செயலாக்க எனப் பலவகையாகக் குறிக்கப் பெறுகிறது. பிரயோக என்பது தமிழ்ச் சொல்லல்ல. பெரும்பாலும் நாம் ‘பயன் பாட்டு’ என்று பயன் படுத்துகிறோம். பயன்பாட்டுநிலை, பயனுறுநிலை முதலானவையாகத்தான் அறிவியல் முதலான துறைகள் உள்ளன. முதலில் செயல் சார்ந்த என்னும் பொருளில் செய்மை எனக் குறித்துப் பார்த்தேன். எனினும் மக்கள் வழக்கத்தை ஒட்டிய சொல்லே சிறப்பாக இருக்கும் என்பதால் அதனை மாற்றிப் பயன்சார்ந்த என்னும் பொருளில் சுருக்கமாகப் பயன்மை எனக் குறித்துள்ளேன். அஃதாவது குறிப்பிட்ட ஒன்றைப் பயன்படுத்திச் செய்யும் முறைமை. எனவே, பயன்மை – Applied எனலாம். |
Applied |
1159. பயன்மை அறவியல் |
Applied Ethics |
1160. பயன்மை உளவியல் |
Applied psychology |
1161. பயன்மை வானிலையியல் |
Applied Meteorology |
1162. பயன்மை விசையியல் |
Applied Mechanics |
1163. பயன்மை நூற்புழுவியல் |
Applied nematology |
1164. பயன்மை மானிடவியல் |
Applied anthropology |
1165. பயன்மை மொழியியல் |
Applied linguistics |
1166. பயன்மைக் கணித இயல் |
Applied Mathematics |
1167. பயன்மைக் குமுகவியல் |
Applied Sociology |
1168. பயன்மைச் சூலியல் |
Applied Embryology |
1169. பயன்மை வளைசலியல் |
Applied Ecology |
1170. பயன்மைப் புள்ளியியல் |
Applied Statistics |
1171. பயன்மைப் பொருளியல் |
Applied Economics |
(தொடரும்)
Leave a Reply