ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1210 – 1224 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1190 – 1209 இன் தொடர்ச்சி)
1210. பறியியல் பறிதல் என்றால் ஒலியுடன் வெளிப்படுதல் எனப் பொருள். பின்வாய் வழியாக வெளியேறும் காற்று பறி எனப்படுகிறது. அதனை நாம் ககர உகரத்திலும் சகரஉகரத்திலும் சேர்த்துக் கூறுவது வழக்கம். இருப்பினும் இச்சொல்லைச் சொன்னாலே கெட்ட நாற்றமே நினைவிற்கு வருவதால், இச்சொல்லைப் பயன்படுத்தப் பலரும் தயங்குவர். எனவே, இது குறித்த ஆராய்வியலைப் பறியியல் எனலாம். |
Flatology |
1211. பற் கட்டுப்பாட்டியல் |
Contrology |
1212. பற்களியல் |
Odontology |
1213. பற்சிதைவியல் |
Cariology |
1214. பற்சீரமைப்பியல் |
Orthodontics/ Orthodontia |
1215. பற்பதியவியல் Implantology – செயற்கைப் பல் இணைப்பியல், பல் பதிய இயல், உள்வைப்பியல், உட்பதிவியல், அச்சம் நீக்கும் மருத்துவம், உணர்வகற்றும் மருத்துவம் எனப்படுகின்றது. பின்னிரண்டும் பொதுவானது. ஆதலின் இங்கே பொருந்தி வராது. பிற அனைத்துமே சரிதான். எனினும் உட்பதிவியல் என்பது பதிவுத்துறை சார்ந்ததாக எண்ணப்படலாம். உள்வைப்பியல் என்பது தொகை வைப்பு தொடர்பாகக் கருதப்படலாம். எனவே, சுருக்கமாகப் பல்பதிய இயல் > பற்பதியவியல் எனலாம். |
Implantology |
1216. பற்றுறுதியியல் |
Pisteology |
1217. பனி உறைவியல் Cryopedology- குளுமை உறைநிலைப்பியல், குளுமை உறைவியல், உறைநிலையியல், தாழ்வெப்ப உறைநிலைப்பியல், தாழ்வெப்பநிலை உறைவியல், உறைபனியியல், குளுமையியல் எனப் பலவாறாகக் கூறப் படுகின்றது. cryos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மிகு குளிர் / பனிக்குளிர். cryo என வரும் முன்னொட்டைப் பனி என்றே பிற இடங்களில் குறித்துள்ளோம். எனவே, பனி உறைவியல் – cryopedology எனலாம். |
Cryopedology |
1218. பனிக் கால நிரலியல் |
Glacial Chronology |
1219. பனிநில அதிர்வியல் |
Cryoseismology |
1220. பனிநிலை உயிரியல் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து உருவான cryo- என்னும் சொல்லின் பொருள் குளிர்ச்சி/ பனி. பனிநிலைச் சூழலில் வாழும் உயிரிகள் பற்றிய ஆய்வு. முதலில் தண்ணுயிரியல் எனக் குறித்திருந்தேன். சொற்சீர்மை கருதிப் பனிநிலை உயிரியல் என மாற்றியுள்ளேன். |
Cryobiology |
1221. பனிநிலைப் பொறியியல் |
Cryogenic Engineering
|
1222. பனிநிலையியல் Cryogenics – மீக்குளிர் நுட்பவியல், உறைவியல், கடுங்குளிரியல், தண்ணாய் வியல், தண்ணியல், குளிரியல், தாழ் வெதணநிலை, வினை முறை ஆய்வியல், தாழ் வெப்ப நிலையியல், தாழ் வெப்பவியல், பனிநிலையியல், தாழ் வெப்பநிலை, மீக் குளிர்வியல், தாழ்ந்த தட்பவெப்ப நிலைபற்றிய இயற்பியலின் கிளைத்துறை எனப் பலவாறாகக் கூறப்படுகிறது. இவற்றுள் இறுதியாகக் கூறப்பட்டது சொல்லாக இல்லாமல் விளக்கமாக உள்ளது. தண் என்பது குளிர்ச்சியைக் குறிப்பதுதானே. எனவே, சுருக்கமாகத் தண்ணியல் என முதலில் குறித்திருந்தேன். எனினும் சீர்மை கருதிப் பனி என்னும் சொல்லையே கையாள்வதே சிறப்பு என முடிவிற்கு வந்தேன். மீக்குளிர், தாழ் வெப்பம் முதலிய எல்லாம் பனிக்குரியவை தானே! Cryo என்பது பனி என்றே பிற இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளதால் பனிநிலையியல் – Cryogenics எனலாம். |
Cryogenics |
1223. பனிப்புவி யியல் |
Glacial geology |
1224. பனியியல் Glaciology– பனிப்பாளவியல், பனியாற்றியல், பனியாற்றியியல், பனிப்பாறை யியல் என நால்வகையாகக் கூறப்படுகின்றது. Glacial chronology – பனியூழிக் காலவியல் எனப்படுகின்றது. Glacies என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பனி. இதிலிருந்து உருவானதே Glaciology. எனவே, பனியியல் என்றாலே போதுமானது. ஒரே சொல்லிற்குப் பொருள்களாகப் பனியாறு, பனிப்பாளம், பனிப்பாறை என வேறுபடுத்த வேண்டா. பனியியல் – Glaciology ; பனிக்காலவியல் – Glacial chronology; கதிரியப் பனியியல் – Radioglaciology; பனிப் புவியியல் – Glacial geology. |
Glaciology |
(தொடரும்)
Leave a Reply