ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1225 – 1240 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1210 – 1224 இன் தொடர்ச்சி)
1225. பன்னாட்டுப் பொருளியல் |
International economics |
1226. பாசக்கியூ இயல் ஐரோப்பாவிலுள்ள பீரெனே (Pyrenees) மலைத்தொடரின் மேற்குப் பகுதியில் உள்ள பாசக்கியூ(பாசுக்கு) நாட்டில் வாழும் பாசக்கியூ மக்களால் பேசப்படும் மொழியே பாசக்கியூ மொழி அல்லது ஈசுகரா மொழி(Basque/Euskara) ஆகும். இம்மொழி பேசும் மக்களின் கலை, பண்பாடு முதலிய குறித்து ஆராயும் துறையே பாசக்கியூ இயல். |
Bascology |
1227. பாசி உயிரிய நுட்பியல் |
Algae biotechnology |
1228. பாசியியல் Phycology/Algalogy/Sphagnology– கடற்பாசி இயல், சாதாழையியல், பாசிஇயல், பாசியியல், அல்காவியல், ஆல்கவியல் எனப்படுகின்றன. இவற்றுள் பின்னிரண்டும் ஒலிபெயர்ப்புச் சொற்கள். எனவே, விலக்க வேண்டும். Phykos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கடற்பாசி. Alga என்பதும் இதைத்தான் குறிக்கிறது. Sphagnology என்பதற்குச் சா தாழையியல் பொருத்தமாக உள்ளது. இதனைத் தரைப்பாசியியல் என்று சொல்லலாமோ என்றும் தோன்றுகிறது. எனினும் மூன்றுமே பாசியைப்பற்றிய அறிவியலின் வெவ்வேறு பெயர்கள். எனவே, பாசியியல் – Phycology / Sphagnology/ Algalogy எனலாம். |
Phycology / Sphagnology/ Algalogy |
1229. பாசியினவியல் |
Muscology |
1230. பாட்டை இணைப்பியல் topology என்பது திணையியல் என்றும் பரப்புருவியல் என்றும் குறிக்கப்படுகிறது. எனினும் இந்த இடத்தில் பயன்பாட்டு அடிப்படையில் இணைப்பியல் எனப்படுகிறது. Bus என்பது இங்கே பேருந்து என்பதைக் குறிக்காது. பாட்டை எனப் பொருள்படும். |
Bus topology |
1231. பாதவியல் Podology – பாதவியல், அடிக்காலியல், காலடியியல் என மூவகையாகக் கூறப் படுகின்றது. Podós என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பாதம். நாம் ஒரே சொல்லையே எல்லா இடங்களிலும் கையாள வேண்டும். (நிலத்தில்)பதி(யும் உறுப்பு) என்பதன் அடிப்படையில் உருவான பாதம் என்பதும் தமிழ்ச்சொல்தான். குறைந்த எழுத்துகள்கொண்ட பாதவியல் என்பதையே நாம் பயன்படுத்தலாம். 1232. பாதவியல் – Podology |
Podology |
1233. பாப்பிரசு சுவடியியல் |
Panyrology |
1234. பாம்பியல் |
Ophiology / Serpentology |
1235. பாய்ம இயங்கியல் |
Fluid Dynamics |
1236. பாய்ம நிலையியல் |
Fluid statics |
1237. பாய்ம விசையியல் |
Fluid mechanics |
1238. பாய்மவியல் |
Fluidics |
1239. பாய்வியல் உருமாற்றவியல், பாய்ம மீள்மையியல், பாய்வியல் என மூவகையாகக் குறிக்கின்றனர். Rheo என்றால் பாய்வு எனப் பொருள். எனவே, பாய்வியல் சரிதான். பாய்மத்தால் உருமாற்றம் ஏற்படுவதன் அடிப்படையில் உருமாற்றவியல் என்றும் பாய்ம மீள்மையியல் என்றும் குறிக்கின்றனர். எனினும் சுருக்கமாக நாம் பாய்வியல் என்றே குறிக்கலாம். |
Rheology |
1240. பாரம் |
Ton |
(தொடரும்)
Leave a Reply