ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 146 – 164 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 133 – 145 இன் தொடர்ச்சி)
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 146 – 164
146. இழைஒளியியல்
Fibre Optics – இழை ஒளியியல், இழையாடி இயல், நுண்ணிழை ஒளியியல், நார் ஒளியியல் என ஐவகையாகக் கூறப்படுகிறது. சுருக்கமான இழை ஒளியியல் – Fibre-optics என்பதை நாம் ஏற்போம்.
|
Fibre optics |
147. இறகியல்
pteron என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் இறகு. |
Pterylology |
148. இறக்கைப்பூச்சி யியல் |
Neuropterology
|
149. இறப்பியல் nekro- என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் இறந்த உடல். இறந்த உடலைப்பற்றிய> இறப்பைப்பற்றிய இயல். |
Necrology |
150. இறை மறுப்பியல் theo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கடவுள். a- என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இல்லை. எதிர்மறையைக் குறிக்கும் முன்னொட்டாக விளங்குகிறது. எனவே, கடவுளுக்கு எதிரான இயல் எனப்பொருளாகிறது. அஃதாவது இறை எதிர்ப்பியல்> இறைமறுப்பியல். இறை எதிர்ப்பியல் என்றால் இறையை ஒப்புக்கொண்டு அஃதை எதிர்ப்பதாகப் பொருள் வருகிறது. இறையிலி என்றால் வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலம் என்னும் பொருள் வரும். எனவே இறையிலியியல் என்றால் அது தொடர்பான இயல் என்று பொருளாகும். எனவே, இறை மறுப்பியல் எனலாம். |
Atheology |
151. இறையியல் இறைமை நூல், இறைமையியல் ஆய்வுத்துறை, கிறித்தவ சமய இறைமை நிலை ஆராய்ச்சிநூல், இறைமையியல், இறையியல், சமய ஞானம், சமய சித்தாந்தம், சமயவியல், தெய்வியல், நோக்க அமைப்பு, விவிலியம், விவிலிய இயல்வேத சாசுத்திரம் எனப் பலவகையாகக் கூறப்படுகின்றது. இவற்றுள் தெய்வயியல் என்பது தெய்வியல் எனத் தவறாகத் தட்டச்சிடப்பட்டுள்ளது. விவிலியம், வேதசாசுத்திரம், கிறித்துவ சமய இறைமைநிலை என்பன குறிப்பிட்ட சமயம் சார்ந்த சொற்கள். ஆனால், இதனைப் பொதுவாகவே கருத வேண்டும். theos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இறைவன். theo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கடவுள். இறைநெறி ஆக்கமும் பரப்பலும் சமயத்தால் நிகழ்வதால் சமயவியல் என்கின்றனர். கிறித்துவர்கள் விவிலிய இயல் என்கின்றனர். நாம் பொதுவாகவே குறிக்கலாம். எனவே, சுருக்கமாக இறையியல் எனலாம். |
Theology |
152. இன வளைசலியல் |
Ethnoecology |
153. இன இசை யியல் |
Ethnomusicology |
154. இன உளநோய் மருந்தியல் |
Ethnopsychopharmacology |
155. இன உறுப்பியல் aidoîa என்னும் பழங்கிரேக்கச் சொல் இன உறுப்பைக் குறிக்கிறது. |
Aedoeology |
156. இன மேம்பாட்டியல் Eu என்னும் கிரேக்கச் சொல்லிற்கு நல்ல எனப் பொருள். இச்சொற்பொருளை மட்டும் கொண்டு இதனை நல்லியல் என்கின்றனர். genics என்பது மேம்பாட்டைக் குறிக்கிறது. எனவே, பயன்பாட்டின் அடிப்படையில் இன மேம்பாட்டியலைக் குறிக்கிறோம். |
Eugenics |
157. இன மொழியியல் |
Ethno Linguistics |
158. இன வயணஇயல் |
Ethnomethodology |
159. இனக்குழு அறவியல் |
Ethnoethics |
160. இனக்குழு இசையியல் |
Ethno Musicology |
161. இனக்குழு உயிரியல் |
Ethnobiology |
162. இனக்குழு உளவியல் |
Ethno Psychology |
163. இனக்குழு மானிடவியல் |
Ethnic Anthropology |
164. இனக்குழு விலங்கியல் |
Ethnozoology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
Leave a Reply