(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1241- 1252 இன் தொடர்ச்சி)

1253. பாறை இயற்பியல்

Petrophysics

1254. பாறை நகர்வியல்

Petrotectonics

1255. பாறை விசையியல் 

Rock mechanics

1256. பாறைக் காந்தவியல்

Palaeo என்பதற்குப் பண்டைய என்பதுதான் பொருள். எனினும் இங்கே பண்டைய தோற்றமான பாறையைக் குறிப்பிடுகிறது. எனவே  பாறைக் காந்த வியல் எனப்படுகிறது.

Palaeo Magnetism

1257. பாறையியல்

Litho என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பாறை/கல். Petra என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பாறை.

Lithology / Lithoidology/ Petrology

1258. பாற்கட்டிஇயல்

Cheesology / Fromology

1259. பான்மைஇயல்

Characterology

1260. பிசாசியல்

Diabology

1261. பிட்ட  ஆரூடவியல்.

Rump என்றால் பிட்டம் எனப் பொருள். உடலின் ஆசனப் பக்கம் பிட்டம் அல்லது புட்டம் எனப்படுகிறது.

பிட்ட அடிப்படையில் எதிர் காலத்தைக் கணித்து ஆரூடம் சொல்வது பிட்ட ஆரூடவியல்.

Rumpology

1262. நோய்ப்புள்ளி யியல்

Morbidity Statistics– நோய் புள்ளியியல், பிணிநிலை புள்ளியியல்  எனப்படுகிறது. இவற்றில் சுருக்கமான நோய் புள்ளியியல் இடையில் ஒற்று சேர்த்து

நோய்ப்புள்ளியியல் – Morbidity Statistics என இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Morbidity Statistics

1263. பிணைப்பு நுட்பியல்           

Linkage technology

1264. பிந்தைய பட்டுக்கூட்டு நுட்பியல்

Post cocoon technology

1265. ஒத்த அண்டவியல்

 ஒத்த அண்டங்களை வகைப்படுத்திய இலுயூகி பியான்சி(Luigi Bianchi) பெயரில் பியான்சி அண்டங்கள் எனப்படுகின்றன. இதனை ஆராயும் துறை ஒத்த அண்டவெளியியல் அல்லது ஒத்த அண்டவியல்.  பொதுவாக, அவ்வறிஞர் பெயரில் பியான்சி அண்டவியல் என்று சொல்லப்படுகிறது.

Bianchi cosmology

1266. பிரிநிலைக் கணக்கியல்

Discrete mathematics

1267.  பிரிநிலைத் திணையியல்

Discrete topology

1268. பிறகோள் திணையியல்

héteros என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் பிற.  Topos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்  இடம். இரண்டும் சேர்ந்து இங்கே பிற கோள் என்னும் பொருளில் வருகிறது.

Heterotopology

1269. பிறழ்நர் இயல்

Kookology

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000