ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1301 – 1313 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1285 – 1300 இன் தொடர்ச்சி)
1301. புவி வளைசலியல் |
Geoecology |
1302. புவி நுட்பியல் |
Geotechnology |
1303. புவிப் பொறியியல் |
Geology Engineering |
1304. புவி வடிவளவியல் |
Geodesy |
1305. புவி வடிவியல் Geomorphology என்பதற்குப் புவிப்புற இயல், புவிப் புறவியல், புவி வடிவியல், நிலக்கூறியல், நிலவடிவ அமைப்பியல், நில வடிவியல், திணையியல், நில வடிவத் தோற்றவியல், புவியுருவ வியல், நில உருவாக்க இயல், புவிசார்வியல், புவியமைப்பியல், புவியியல், புவிப்புறவடிவியல், புவி உருவியல், புவிப்புறத் தோற்ற வியல், புவிப்புறவுருவியல், புவிப் புரவியல் எனப் பலவகையாகக் கூறுகின்றனர். ஒற்றைச் சொல்லிற்குப் பன்முகப் பொருளாட்சி இருப்பது குழப்பத்தை விளைவிக்கும். எனவே, பயன்பாட்டுச் சீர்மை ஏற்படுத்த வேண்டும். புவிப்புரவியல் என்பது ‘ற’ விற்கு மாற்றாக ‘ர’ இடம் பெற்று, எழுத்துப் பிழையாக அமைந்து பல அகராதிகளில் இடம் பெற்றுவிட்டது. Topololgy-திணையியல் என வரையறுத்துள்ளதால் இங்கே பயன்படுத்த வில்லை. சிலவற்றில் இக்கலைச் சொற்களில் புவிக்கு மாற்றாக நில(ம்) இடம் பெற்றிருக்கும். எல்லாமே அடிப்படையில் நிலத்தின் – புவியின் வடிவ அமைப்பைத்தான் குறிக்கின்றன. எனவே, சொற் சீர்மையாக geomorphology – புவி வடிவியல் எனப் பயன் படுத்தலாம். இவற்றுள் புவிப்புறவியல் புவிக்குப் புறத்தே விண்ணில் உள்ள பொருள்களைக் குறிக்கவும் (Exogeology) பயன்படுகிறது. எனவே, குழப்பத்தைத் தவிர்க்க இச்சொல்லைத் தவிர்ப்பதே நல்லது. புவி வடிவியல் – Geomorphology இலக்கண இயலில் Morphology = உருபனியல் எனப் பொருள். |
Geomorphology |
1306. புவி வேதியியல் |
Geo Chemistry |
1307. புவி-எரிபொருள் இயல் / கன்னெய்ப் புவியியல்/ பாறை நெய்ப் புவியியல் |
Petrogeology / Petroleum Geology |
1308. புவிக் கால நிரலியல் |
Geochronology |
1309. புவி அமைப்பியல் |
Structural geology |
1310. புவிச்சுமை யியல் |
Pherology |
1311. புவித் தொல்லியல் |
Geoarcheology |
1312. புவிப் புள்ளியியல் |
Geostatistics |
1313. புவி மேலோட்டியல் இந்த இடத்தில் நேர் பொருளாக இளம் நகர்வியல் அல்லது புது நகர்வியல் என்று குறிப்பது பொருந்தாது. புவியின் மேலோட்டில் நடைபெறும் அசைவுகள், சிதைவுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை என்பதால் புவிமேலோட்டியல் என்பதே பொருத்தமாக இருக்கும். |
Neotectonics |
(தொடரும்)
Leave a Reply