(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1314 – 1329  இன் தொடர்ச்சி)

1330. புற்றுநோயியல்/ பிளவையியல்

onco என்னும் புது இலத்தீன் சொல்லின் பொருள் கட்டி.

Oncology/ Cancerology

1331. பூச்சி பொட்டு இயல்

Acarology– சிறு பூச்சியியல், பூச்சி பொட்டு இயல், மென்னுண்ணியியல், பேன் உண்ணி இயல்  என நால்வகையாகச் சொல்லப்படுகின்றது.

Acaro என்பதன் கிரேக்கச் சொல்லிற்கு உண்ணி எனப் பொருள். இருப்பினும் பூச்சி பொட்டு இயல் என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். எனவே பூச்சி பொட்டு இயல் –  Acarology என இங்கே குறிக்கப்பட்டுள்ளது.

Acarology

1332. பூச்சியியல்

éntomon என்னும் பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் பூச்சி. இதிலிருந்து பிரெஞ்சிற்குச் சென்று Entomology சொல் உருவானது.

Entomology / Insectology 

1333. தேன் தாதியல்

காண்க: பூந்தாதியல் & வாயுப் பூந்தாதியல்

Melissopalynology

1334. பூனையியல்

fēlīnus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காட்டுப் பூனை.

Felinology

1335. பெண்ணிய ஒட்பவியல் காண்க:  ஒட்பவியல் – Epistemology / Pantology / Sophology

Feminine epistemology

 

1336. பெண்ணியல்

குருது மொழியில்(Kurdish language) jin என்றால் பெண் என்றும் jiyan என்றால் வாழ்க்கை என்றும் பொருள்.

இன்யோங்கு (Jin Yong) என்ற புனைபெயர் கொண்ட இலூயிசு சா இலியூங்கு -யுங்கு(Louis Cha Leung-yung) (6.02.1924 – 30.10.2018) என்னும் சீன  எழுத்தாளரின் படைப்புகளைப் பற்றிய ஆய்வுத் துறை  எனச் சிலர் குறித்ததன் அடிப்படையில் இன் யோங்கு இயல்  என முதலில் குறித் திருந்தேன். சிரியா சித்தாந்தத் திற்கும்(Jineology) இவரின் படைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதா எனத் தெரியவில்லை. எனினும் அது தனியாகக் குறிக்கப்பட்டிருப்பதால் இதனை நீக்கிவிட்டேன்.

Jineology (1)

1337. பெண்ணுறுப்புக் கதிரியஇயல்

Gynoroentgenology

1338. வெட்டுக்கிளி யியல்

Acridology – பெயர்வன இயல், வெட்டுக்கிளியியல், பூச்சிப் பெயர்வியல் எனக் கூறப்படுகின்றது.

வெட்டுக்கிளியைக் குறிக்கும் கிரேக்கச்சொல்லில் இருந்து Acri உருவானது.

(புலம்பெயரா)வதி வெட்டுக்கிளிகளையும் புலம் பெயரும் வெட்டுக்கிளிகளையும் ஆராயும் துறை இது. பெயர்வன இயல் அல்லது பூச்சிப் பெயர்வியல் என்றால் பிற பெயர்வனவற்றையும் குறிப்பதாக அமையும். எனவே, வெட்டுக்கிளி யியல் என்று சொன்னால் போதும்.

Acridology

1339. பெரு வானிலையியல்

Macrometeorology

1340. பெருநகர்வியல்

மீவடிவ பாறையமைப்பு நகர்வியல், பேரியல் கண்டத்தட்டு நகர்வியல் என இருவகையாகவும் குறிப்பிடுகின்றனர். சுருக்கமாகப் பெரு நகர்வியல் என்பது பொருத்தமாக உள்ளது.

Megatectonics

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000