(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1465-1476 இன் தொடர்ச்சி)

1477. மனிதச் செய்திறனியல்

 பாதுகாப்பு, செயல் திறன் தொடர்பான மாந்தரின் பணிச்சூழல் ஆய்வு. இந்த இடத்தில் Engineering என்பதை  பொறியியல் என்று கூறுவதை விடச் செய்திறனியல் என்பதே சரியாக இருக்கும். மனிதப் பொறியியல் / மனித உடற்கூற்றுப் பொறியியல் எனப் பிறர் கூறுவது பொருந்தாது. மனிதச் செய்திறனியல் எனலாம். பணிச்சூழலுடன் தொடர்புடையது என்பதால் இதனை ergonomics உடன் இணைத்து விடலாம்.

Human Engineering

 

1478. மனிதத் திறன்சார் பொறியியல்

Human-Factors Engineering

1479. மனிதவளர்ச்சி வளைசலியல்

Ecology of human development

1480. மனிதவியல்    

Anthrapology

1481. மனையியல்

oîkos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மனை/வீடு.

Oikology

1482. மனைவளர் உயிரியல்

thremmat என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வீட்டில் வளர்க்கும் – மனையில் வளர்க்கும்  உயிரினங்கள். மனைவளர் உயிரினங்கள் குறித்ததே இவ்வியல்.

 மனைவளர் உயிரினங்கள், செல்ல உயிரிகளுடன் வீட்டில் வளர்க்கும் தாவரங்களையும் குறிக்கும். எனவே, உயிரியியல் என்று சொல்லாமல் உயிரியல் எனக் குறித்துள்ளேன்.

Thremmatuhology

1483. மன்பதை அரசியல் 

Community politics

1484. மன்பதை உளவியல்

Community Psychology

1485. மன்பதை வளைசலியல்

Community Ecology

1486. மாட்டின நோயறிதல்

bous என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பசு, காளை முதலிய மாட்டினம்.

Buiatrics

1487. மாணிக்கவியல்

மாணிக்க வேலைப்பாடு என்னும் பொருளிலும் இதைக் கையாளுகின்றனர்.

Dactyliology (2)

(தொடரும்

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000