ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1488 – 1500 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1477 – 1487 இன் தொடர்ச்சி)
1488. மாதவிடாயியல் மாதந்தோறும் என்னும் பொருளுடைய Emmenosஎன்னும் சொல்லில் இருந்து Emmeno உருவானது. பெண்களுக்கு மாதந்தோறும் வரும் விலக்கு குறித்த இயல். |
Emmenology |
1489. மாந்தக் குமுகவியல் |
Anthroposociology |
1490. மாந்தர்விலங்கு தொடர்பியல் மாந்தருக்கும் விலங்கினத் திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயும் துறை. எனவே, Anthrozoology என்பதன் நேர் பொருளைக் குறிக்கக் கூடாது. இதன் மற்றொரு பெயர் மாந்தர்-அல்மாந்தர்-விலங்குகள் ஆய்வு/human–nonhuman-animal studies என்பதாகும். ஆதலின் மாந்தர் விலங்குகள் தொடர் பியல் எனலாம். |
Anthrozoology |
1491. மார்சியக் குமுகவியல் |
Marxist sociology |
1492. மார்பகவியல் mastós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மார்பு. Seno என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் மார்பு. |
Mastology / Senology |
1493. மாழை ஆய்வியல் மாழை ஆய்வு என்னும் பொருள் கொண்ட பழங் கிரேக்கச் சொல்லில் இருந்து Docim உருவானது. |
Docimology |
1494. மாழைப் பொறியியல் |
Metallurgical Engineering |
1495. மாறுகண்பண்டுவம் |
Orthroptics |
1496. தொல்தோற்ற இனவியல் தொல்தோற்ற இனவியல், மானிட–குரங்கின இயல் என இருவகையாகவும் கூறு கின்றனர். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தவன் என்னும் கருத்தின் அடிப்படையிலான இயல். தொல்தோற்றம் என்பதும் மனிதத் தோற்றத்தைத்தான் குறிக்கிறது. எனவே, தொல் தோற்ற இனவியல் என்றே குறிக்கலாம். |
Anthropobiology |
1497. மானிட ஆக்கப் புவி வடிவியல் |
Anthropo geomorphology |
1498. மானிட மெய்யியல் |
Philosophical Anthropology |
1499. மானிட மொழியியல் |
Anthropological linguistics |
1500. மானிடவியல் |
Anthropology |
(தொடரும்)
Leave a Reply