கருவிகள் 1600 : 1 – 40 – இலக்குவனார் திருவள்ளுவன்
- ‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி – U-tube manometer
‘வளை ப’(U) வடிவக் குழாய் வளியழுத்தமானி > ‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி
- அகச்சிவப்பருகு படவரைவு கதிர்நிரல் மானி(அ. ப. க) – near-infrared mapping spectrometer (nims)
- அகச்சிவப்பு ஒளி முனைவுமானி (அ.சி.ஒ.மு.மா) – infrared photo-polarimeter (isophot) : வான்பொருள் வெளிப்படுத்தும் அகச்சிவப்புக் கதிரியத்தைக் கண்டறிய உதவும் கருவி.
- அகச்சிவப்பு நிறமாலைமானி – infrared spectrometer :
வேதியல் கலவைகளின் செறிவை அகச்சிவப்புக் கதிரியத்தை அளப்பதன் மூலம் கண்டறியப்பயன்படும் கருவி.
- அகச்சிவப்பு நுண்ணோக்கி-infrared microscope :
அகச்சிவப்புக் கதிர்வீச்சுடன் நுண்ணிய பொருள்களை உருப்பெருக்கிக்காட்டும் கருவி.
- அகச்சிவப்பு வெங்கதிர்மானி-infrared bolometer :
அகச்சிவப்புக்கதிர் வீச்சினைப் பயன்படுத்தும் வெப்பக்கதிர்மானி.
- அகச்சிவப்பு வெப்பமானி-infrared thermometer :
ஒரு பொருளின் வெப்பநிலையை வரையறுக்க, அது வெளிப்படுத்தும் அகச்சிவப்புக் கதிரியத்தை ஒருமுகப்படுத்திக் கண்டறியும் கருவி.
- அகச்சிவப்பு வெப்பவரைவி-infrared thermograph :
அகச்சிவப்புக் கதிரினைப்பயன்படுத்தும் வெப்ப வரைவி.
- அகச்சிவப்புக் கதிர் நோக்கி-metascope :
அகச்சிவப்புக்கதிரினை நோக்கு ஒளியாக மாற்றும் கருவி.
10. அகச்சிவப்புத் தொலைநோக்கி-infrared telescope :
வான் பொருள்களைக் கண்டறிய அகச்சிவப்பு ஒளியைப் பயன்படுத்தும் தொலைநோக்கி.
11. அகர முன்மி ங – கதிர் நிறமாலைமானி (அ.மு.ங.நி.மானி) – alpha proton x-ray spectrometer (apxs)
12. அகவூடுபரவுமானி – endosmometer :
உள்நோக்கி ஊடுபரவலை அளக்கும் கருவி. ஐரோப்பிய அகராதியில் முனை யூச்சமானி எனக் குறிக்கப்பெற்றுள்ளது. ஊசல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொல்லா எனத் தெரியவில்லை. செயற்பாட்டு அடிப்படையில் அகவூடுபரவுமானி என்பதே பொருத்தமாக அமையும்.
13. அச்சுமானி – axometer :
விழியச்சுகளின் நிலையைக் கண்டறிய பயன்படும் கருவி.
14. அச்சுவழித் திரள் பாய்மமானி – axial-type mass flowmeter :
அச்சுவழிப் பொருண்மை பாய்மமானி என்கின்றனர். பொருண்மை எனக் கூறுவதைவிடத் திரள் என்பதே இங்கு பொருத்தமாக இருக்கும். எனவே அச்சுவழித் திரள் பாய்மமானி எனலாம்.
15. அச்சொன்றிய அலைமானி – coaxial wave meter
16. அச்சொன்றிய வெங்கதிர்மானி – coaxial bolometer
17. அசை மாறு தூண்டல் மானி – brooks variable inductometer
18. அசைபட நோக்கி – kinetoscope :
உடல் இயக்க ஒளிப்படக்கருவி / அசைவு ஒளிப்படக்கருவி என ஐரோப்பிய அகராதி கூறுகிறது. அசைபட நோக்கி எனச் சுருக்கமாகக் கூறலாம்.
19. அசைவு வரைவி – kymograph : ஒலி வரைவி(- மூ. 362) ஒலியழுத்த அளவி (- ம 387)
ஒலி அலைகளின் அழுத்த வேறுபாடுகளைப் பதிவு செய்யுங் கருவி; அசைவு வரைகருவி எனப் பலவகையாகக் குறிக்கப் பெறுகின்றது. பொதுவாகவும் சுருக்கமாகவும் அசைவு வரைவி எனலாம்.
20. அடர் ஈரமானி – hare’s hygrometer :
உறிஞ்சி பயன்படுத்தப்படும்பொழுது இரு செங்குத்துக் கண்ணாடிக் குழல்களில் உயரும் அளவைகள் மூலம் நீர்மங்களின் அடர்த்தி விகிதத்தை வரையறுக்கும் நீரடர்மானி வகையைச் சேர்ந்த கருவி.
21. அடர்த்திமானி – densimeter/ densitometer/ density meter
22. அடராடி உறழ்மானி – jamin interferometer :
பிரெஞ்சு இயற்பியலாளர் யூல் யமின் (Jules Jamin) என்பவரால் மேம்படுத்தப்பட்டதால் அவர் பெயரில் யமின் உறழ்மானி எனப்படுகிறது. இரண்டு அடர் கண்ணாடிகளால் ஆக்கப்பட்டுள்ளமையால் அடராடி உறழ்மானி எனலாம்.
23. அடாத்துச் சமன்மானி – force-balance meter
(அடாத்து – force)
24. அடித்தளக் கதிரி – baseboard radiator :
சுவர், தளத்தைச் சந்திக்கும் அடிப்பகுதியில் அமைந்துள்ள கதிரிய வெப்பமுறை அலகு.
25. அடுக்காய்வு உறழ்மானி – michelson interferometer :
ஆல்பர்ட்டு ஆபிரகாம் மைக்கெல்சன் (Albert Abraham Michelson)என்னும் அறிவியலாளரால் உருவாக்கப்பட்டது. செயல்பாட்டு அடிப்படையில் அடுக்காய்வு உறழ்மானி எனலாம்.
26. அடுக்கிடை ஒளிவிலகல்மானி – abbe refractometer :
ஏர்னசுட்டு அப்பே [Ernst Abbe (1840–1905)] என்னும் அறிஞர் பெயரில் அழைக்கப்படும் இக்கருவி, மிகத் துல்லியமான நீர்மங்களின் ஒளிவிலகலை அளக்க உதவுவது.
27. அடுக்கு மழைமானி – vecto pluviometer
28. அடுக்குக் குழல் சூழிட நோக்கி – battery command periscope :
செங்குத்தாக அமைக்கப்பட்ட இரட்டைத் தொலை நோக்கிக் குழல் உடைய சூழிட நோக்கி.
29. அண்டக் கதிர் தொலைநோக்கி – cosmic ray telescope :
அண்டக்கதிரின் போக்கை அறியவும் வரையறுக்கவும் உதவும் தொலைநோக்கி.
30. அணு ஈரப்பத மானி – atomic moisture meter
31. அணுக்கரு சுழல் நோக்கி – nuclear gyroscope
32. அணுக்கரு ஒத்ததிர்வு காந்தமானி – nuclear resonance magnetometer
33. அணுக்கரு காந்தமானி – nuclear magnetometer
34. அணுத்துகள் நோக்கி -hodoscope
35. அணுவிய விசை நுண்ணோக்கி – atomic force microscope
36. அதிபரவளைவாடித் தொலைநோக்கி – newtonian-cassegrain telescope :
அதிபரவளைவு ஆடியில் இருந்து ஒளி எதிரொளித்து, மூலைவிட்ட கண்ணாடியில் இருந்து மீண்டும் எதிரொளித்துக் குவித்துக் காட்டும் கருவி.
அதிபரவளைவாடித் தொலைநோக்கி எனலாம்.
37. அதிர்வு நுண்ணோக்கி – vibration microscope
38. அதிர்வு மின்கடவுமானி – vibration galvanometer
39. அதிர்வுக் காந்தமானி – vibration magnetometer
40. அதிர்வுக்கோல் மின்மானி – vibrating-reed electrometer :
அதிர் கட்டை மின்மானி (-இ.). என்றாலும், சொற்சீர்மை கருதி, அதிர்வுக்கோல்மானி என்பதுபோல், அதிர்வுக்கோல் மின்மானி எனலாம்.
[ அகராதிகள் குறிப்பு
(-செ.) – சென்னைப் பல்கலைக்கழக அகராதி
(-மூ.) – பேராசிரியர் அ.கி.மூர்த்தி அவர்களின் அறிவியல் அகராதி
(-ம. )- மணவை முசுதபாவின் கலைச்சொல் களஞ்சிய அகராதி
(-ஐ.) – ஐரோப்பிய இணைய அகராதி
(-இ.) – தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணைய அகராதி ]
(பெருகும்)
Leave a Reply