சட்டச் சொற்கள் விளக்கம் 301-305 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 296-300: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 301-305
301. accelerated soil erosion | விரைவான மண்ணரிப்பு விரைந்த மண் அரிமானம் மாந்தவியல் செய்முறைகள், மண், தாவரங்கள் அல்லது தட்ப வெப்ப நிலைகளை மாற்றியமைக்கும்போது இயல்புத் தன்மைக்கு மீறிய அரிமானம் நிகழ்கிறது. |
302. Acceleration | முடுக்கம் நடைபெற உள்ளதன் காலத்தைச் சுருக்குவதைச் சட்டம் முடுக்கம் எனக் குறிக்கிறது. முன்னுறல் உரிமை முன்னுறல். எதிர்நோக்கும் உரிமை அதற்கு முன்னவர் செயற்பாடின்றிப் போவதால் உடன் வருதல். உரிமை விரைவு /உரிமை வரைவு எனச் சிலர் குறிக்கின்றனர். தவறான பொருள் விளக்கத்திற்கு வழி வகுக்கும் என்பதால் இதனைக் குறிக்க வில்லை. |
303. acceleration clause | விரைவுபடுத்தும் கூறு விரைவுபடுத்தும் கூறு என்பது, கடன் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு தொடராகும். கடன் வாங்குநர், சில நிபந்தனைகளின் கீழ்க் கடனை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது. கடனாளி கடன் ஒப்பந்தத்தை மீறும் போது, இவ்விதி செயல்படுகிறது. |
304. acceleration, doctrine of | முன்னுறல் கோட்பாடு உரிமை முன்னுறல் கோட்பாடு ஒரே சொத்தில் அடுத்தடுத்த இருவர் உரிமை மாற்றம் பெறக்கூடிய நேர்வில், முதலில் உரிமை மாற்றம் பெறுநர் தம் பொறுப்பை நிறைவேற்றத் தவறுகையில் அடுத்துள்ளவரின் உரிமை மாற்றம் அவருக்கு உரிய காலத்திற்கு முன்னமே செயற்பாட்டிற்கு வரும். பொதுவாக ஒப்பந்தச் சட்டத்தில் முன்னுறல் கோட்பாடு அடிக்கடி பயன்படுத்துப்படுகிறது பயிரியலில் விரைவான வளர்ச்சியை – வளர்கின்ற விரைவை – வளர்விரைவைக் குறிக்கிறது. எனவே, வளர்விரைவுக் கோட்டபாடு |
305. accelerative | முன்னுறல் பாங்கு விரைவுபடுத்தும் பாங்கில் அமைந்த செலுத்தப்படாத வட்டி தொடர்பான சட்டநடவடிக்கையைத் தொடக்குதல் அல்லது தொடருதல் அல்லது விரைவுபடுத்தல். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply