சுரதாவின் தமிழ்ச்சொல்லாக்கம் 621-638
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 616-620 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 621-638
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
621. ராசுட்டிரம் – நாடு
ஆந்திர சக்கரவர்த்திகள் காலத்தில் கர்மக ராசுட்டிரம் என்னும் ஒரு பூபாகம் ஆந்திர தேசத்தின் மத்தியில் சிறந்து விளங்கியது. இதுவே காலாந்தரத்தில் கம்மராசுட்டிரம் என்றாகிப் பின்னர் ’கம்ம நாடு’ என உச்சரிக்கப்பட்டதாகச் சிலசாசனங்களால் தெரிய வருகிறது. இக்கம்ம நாட்டை பரிபாலித்த ஆந்திர சக்கரவர்த்திகளுக்குப் பின் சோழர்களும், கடைசியாக முகமதியர்களும் அரசாண்டதாகச் சரித்திரங் கூறுகிறது.
மேற்சொன்ன தமிழ் மன்னராகிய சோழர்கள் இம் மண்டலத்தைப் பரிபாலனஞ் செய்த பொழுதுதான் கர்மக ராசுட்டிரம் என்ற பெயர் கம்ம நாடெனத் திரிந்திக்கிறது. ஏனெனில் சுலபமாக உச்சரிக்க கர்ம என்பதை கம்ம என்று வழங்கியிருக்க வேண்டும். ஆகையால் கம்ம என்பது கர்ம என்பதின் மரூஉ மொழியாகும். ராசுட்டிரம் என்பதற்குத் தமிழ் வார்த்தையாகிய நாடு என்பதைச் சோழர்கள் வழங்கியிருக்க வேண்டும். இவையிரண்டுஞ் சேர்க்கக் கம்ம நாடு என்பதாகும். இதில் வசித்தவர்களே கம்மவார் என நாமங் கொண்டார்கள் என்று கொள்ளுதலே பொருத்தமாகத் தோன்றுகிறது.
நூல்: கம்ம சரித்திரச் சுருக்கம் (1928) பக்கங்கள் 12, 13
நூலாசிரியர் : சு. வேங்கடசாமி நாயுடு
(தமிழாசிரியர், முனிசிபல் ஐசுகூல், பழநி)
622. ஆகாய வாக்கு – வான்மொழி
நூல் : திருப்புனவாயிற் புராணம் (1928)
நூலாசிரியர் : திருவாரூர் தியாகராச கவிராச தேசிகர் அரும்பதவுரையாசிரியர் தூத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை
★
623. பாத கமலம் – திருவடித் தாமரை
624. தர்மசாத்திரம் – பட்டாங்கு
625. விருதா- வீண்
626. பூததூளி – அடிப்பொடி
627. பால குச அம்பிகை – இளமுளையம்மை
628. பர்வத புத்திரி – மலைமகள்
629. பூரணி – நிறைந்தவள்
630. சுகக்கடல் – இன்பவாரி
631. கோமளம் – பேரழகு
632. பஞ்சாக்கரம் – எழுத்தஞ்சு (அஞ்செழுத்து)
633. வேதபுரி – மறையூர்
634. தீபம் – விளக்கம்
635. சந்திர மௌலீசுரர் – மதி முடியார்
636. பிரவாகம் – பெருக்கு
637. விற்பனம் – அறிவுடையை
638. நவம் – புதுமை
நூல் : திருவோத்தூர் சிரீ இளமுலை அம்பிகை அந்தாதி (1928)
நூலாசிரியர் : கருந்திட்டைக்குடி வி. சாமிநாத பிள்ளை
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply