(தமிழ்ச்சொல்லாக்கம்: 368-370 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 371-383

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

371. Legal Advice – புத்திமதி

நியாயாதிபதி : பாரிசுடரே, நல்லது நீர் கைதியிருந்த கூட்டிற்குள் போவீர்.

பாரிசுடர் : ஐயா, எனக்குக் கைதியைத் தப்பித்து விடப் புத்திமதி சொல்ல அதிகாரம் கிடையாதா என்று சொல்லிக் கொண்டே கூட்டிற்குள் சென்றார்.

நூல்      :           சிறுமணிச்சுடர் (1920) பக்கங்கள் : 14, 15

நூலாசிரியர்      :           மதுரை எசு.ஏ. சோமசுந்தரம்

372. திலகம் – பொட்டு

திலகம் என்பது திலதம் எனவும் வழங்கும். இது வடசொல். இதனைத் தமிழர் பொட்டு என்பர். இது, ‘பொட்டணியா னுதல் போயினு மென்று பொய்போலிடை’ என மணிவாசகர் கூறலானு மினிது விளங்கும்.

நூல்      :           சீகாளத்திப்புராணம் மூலமும் உரையும் (1920) பாயிரம், பக். – 3

உரையாசிரியர்  :           மகாவித்துவான் காஞ்சிபுரம் இராமாநந்தயோகிகள்

373. கண்யம்   —        மேம்பாடு

374. குதவருத்தம்        —        மூலநோய்

375. அந்தரியாமி         —        உள்ளீடா யிருப்பவன்

376. பாவம்     —        அறன்கடை

377. சம்பத்து   —        செல்வம்

378. தோசம்  —        பீடை

379. சகா          —        துணை

380. தந்திரம்   —        சூழ்ச்சி

381. உபாசனை           —        வழிபாடு

382. கிரகப்பிரவேசம்  —        குடிபுகல்

383. விசித்திரம்           —        கற்பனை

நூல்      :           கலங்காத கண்ட விநாயகர் விண்ணப்பமாலை (1920)

நூலாசிரியர்      :           தேவி கோட்டை சிதம்பரச் செட்டியார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்