( தமிழ்ச்சொல்லாக்கம் 648-653 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 654-662

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 

கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

654. உத்யானம் – பூத்தோட்டம்

உத்யான பத்திரிகை என்ற வடமொழியில் வெளிவரும் மாத சஞ்சிகை – ஒரே உரூபாய் சந்தாவுள்ள மாத சஞ்சிகை, திருவையாறு என்று கூறப்படும் ஊரிலிருந்து வெளிவரும். இதை ஐந்து ஆறுகளின் மத்தியில் விளங்கும் உன்னதமான உத்யானத்தில் -பூத்தோட்டத்தில் வீசும் வாசனையைக் கிரகித்து வெளிவரும்.

நூல்   :           சுயமரியாதை கண்டன திரட்டு (1929) பக்கம் – 8

கட்டுரையாளர்    :           நாரதர்

சரிகை         –           பொன்நூல் (641 காண்க)

655. சீவன்முத்தர் –           கதிமேலார்

656. மோட்சம்        –           பேராப்பதம்

657. சையோகம்   –           புணர்ச்சி

658. கவிவாணர்   –           பாவலர்

நூல்   :           நளாயினி வெண்பா (1929)

நூலாசிரியர்         :           திருப்பத்துார் கா.அ. சண்முக முதலியார்.

659. City Police – பட்டணக் காவலாளிகள்

1459இல் ஃகுமாயூன் தன் படைகளுடன் கிளர்ச்சித் தலைவனாகிய தெலிங்கானா சமீன்தாரை சயிக்கப் படை எடுத்த போது பீதரில் ஓர் கலகம் நேர்ந்தது. அதை அல்லாவுத்தீன் கேள்வியுற்று பீதர் சென்று பட்டணக் காவலாளிகள் (City Police) இரண்டாயிரம் நபர்களை அசாக்கிரதை என்னும் குற்றத்திற்காகக் கொலை செய்தான்.

இதழ்     :               ஆனந்த போதினி தொகுதி – 15, (15.12.1929) பகுதி – 6 பக்கம் 376

கட்டுரையாளர்  :               கதாரத்ன சே. கிருஷ்ணசாமி சர்மா

*

660. வசனம் – உரைநடை

661. (இ)ரசவாதிகள் – பொன் செய்வோர்

நூல்        :               மதிமோச விளக்கம் (1929)

(நான்காம் பதிப்பு) பக்கம் : 4

மொழியாக்கம்  :               நா. முனிசாமி முதலியார்

(‘ஆனந்த போதினி’ பத்திராதிபர்)

662. அந்தப்புரம் – உள்ளறை

‘அந்தர்’ என்னும் வடமொழித் திரிபு ஆதலால் தற்பவம்.

நூல்        :               நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தி உரையும் (1929) பக்கம் : 35

உரையாசிரியர்   :               சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்