சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 -694
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 -694
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
688. பரசுபரம் – ஒருவர்க்கொருவர்
மதங்களின் ஏற்றத் தாழ்வை யுன்னி யானை கண்ட குருடர்போல் பரசுபரம் (ஒருவருக்கொருவர்) கலகம் விளைவித்துக் கொள்ளா நிற்கும் மதசுதர்களென்பான், துயதிது தீயதிது வென்னு மாக்கள்’ என்றும், இவ்வாறு மதசுதர்கள் தத்தம் சித்தாந்தத்திற் கேற்ற தத்துவத்தைக் கொள்ளினும் அவர்கள் யாவருக்கும், விரோதமின்றி அவ்வத் தத் வமாயிலங்குபவன் இறைவன் என்பான் ‘அது வதுவா யிறை யிருக்கும்’ என்றும், அதுபோல் யாமும் மதசுதர்க ளெல்லாரோடும் விரோதமின்றி யொழுகுவோமாக வென்பான், ‘இறை இருக்கும் படியேயா யிருக்க என்றும் கூறினார்.
நூல் : சசிவன்ன போதம் (1930) பக்கம் – 9
நூலாசிரியர் : காஞ்சி நகர் ஆ. செங்கல்வராய முதலியார்
: (தருக்க வேதாந்த போதகாசிரியர்)
★
689. பீதாம்பரம் – மின்நூல் ஆடை
நூல் : நூல் புள்ளிருக்கும் வேளுர் தேவாரம் (1929)
பதிப்பித்தவர் : ச. சோமசுந்தர தேசிகர்
: (வைத்தீசுவரன் கோயில்)
★
690. ஈசானம் – ஆளுதல்
691. தற்புருடம் – காத்தல்
692. அகோரம் – அழித்தல்
693. வாமதேவம் – விளக்கல்
694. சத்தியோசாதம் – தோற்றுவித்தல்
திருமறைக் காட்டிலே பகவன் என்று ஒருவனிருந்தான். சீரிய ஒழுக்கம் பெற்றவன். சோமன், சூரியன், அக்கினி என்ற மூன்று விழிகளையுடையவராயும், ஈசானம் (ஆளுதல்), தற்புருடம் (காத்தல்), அகோரம் (அழித்தல்), வாம தேவம் (விளக்கல்), சத்தியோ சாதம், (தோற்றுவித்தல்) என்கின்ற ஐந்து முகங்களையுடையவராயும், இராசத வடிவத்திற்றோன்றிய பிரமன், தாமத வடிவிற் றோன்றிய விட்ணு, சாத்துவீக வடிவிற்றோன்றிய உருத்திரன் முதலியவர்களுக்கு முதல்வராக வீற்றிருக்கின்ற சிவபெருமானை, நாடோறும் அன்போடு போற்றும் தன்மையை யுடையவன்.
நூல் : திருக்குடந்தைப் புராண வசனம் (1932) பக்கம் – 78
நூலாசிரியர் : பு, து, இரத்தினசாமி பிள்ளை
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply