(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 764 -767 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  770- 775

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

770. பாசியம்       :               விருத்தியுரை

771. எமதர்மன்    :               அறக்கடவுள்

நூல்        :               வைணவ சமய வினாவிடை (1936), பக்கங்கள் 11, 13.

நூலாசிரியர்         :               காரைக்கால் நா. சிரீரீ காந்த ராமாநுசதாசர்

772. கருத்தா – இயற்றுவோன்

உபாதானத்தைக் கோசரிக்கும் அபரோட்சஞானம், செய்யும் இச்சை, முயற்சி இவற்றையுடைமை கருத்தா இயற்றுவோன்)த்தன்மையாம்.

நூல்        :               தருக்க சங்கிரகமும் தருக்க சங்கிரக தீபிகையும் (1936)

மொழி பெயர்ப்பு              :               சி. சுப்பையா சுவாமி

773. ஆதாரம் – பற்றுக்கோடு

அங்ஙனமாயினும் காலம் எல்லாவற்றிற்கும் பற்றுக்கோடு (ஆதாரம்) ஆகையால் எல்லா இலக்கணங்களுக்கும் ஆண்டு அதிவியாப்தி எனின், அற்றன்று, எல்லாவற்றிற்கும் ஆதாரத்தை யுண்டாக்கும் (காலீசு) சம்பந்தத்தினும் வேறான சம்பந்தத்தால் இலக்கணத்திற்கு ஒப்பியிருப்பதால்.

நூல் ; பக்கம் – 15

774. மூலகன்மம் – முதல் வினை

உயிர்கள் ஆணவத்தில் அழுந்திக் கிடக்குங்கால் பல பேதமான ஏற்றத் தாழ்வுள்ள ஆணவ சம்பந்தமுடையதாக இருந்திருத்தல் வேண்டும். அதனோடு இறைவன் அருள் சம்பந்தமும் உடையதாக இருந்திருக்கிறது. இவ்விருவகை சம்பந்தத்தால் உயிர்கள் அனாதியே பாவ புண்ணிய முடையதாயிருந்திருக்கின்றன. இதுவே மூலகன்மம் (மூலகன்மம் – முதல் வினை).

நூல்        :               சித்தாந்தம் பொன்மொழி (சிற்றுரை (1936) பக்கங்கள் -8, 9

நூலாசிரியர்         :               வித்வான் ம. பெரியசாமிப் பிள்ளை

775. பரிசம் – தொட்டால் அறிதல்

உயிர் என்பது யாது? நான் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது எதுவோ அதுவே உயிர். எனது உடல் என்பதனால் உடலினின்று வேறானது உயிர். ஓசை, ஒளி, மணம், சுவை, பரிசம் (தொட்டால் அறிதல்) ஆகிய ஐம்புலன்களையும் மனம் புத்தி இவற்றின் உதவியால் அறிகின்றது எதுவோ அதுவே உயிர்.

நூல் : பக்கம் 15

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்