சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 797-807
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 791 – 796 – தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 797-807
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
797. ஆசுகவி,
798. மதுரகவி,
799. சித்திரகவி,
800. வித்தாரகவி
ஆசுகவி – கடும்பாச் செய்யுள்
மதுரகவி – இன்பாச் செய்யுள்
சித்திரகவி – அரும்பாச் செய்யுள்
வித்தாரகவி – பெரும்பாச் செய்யுள்
★
801. (இ)லாவணியம் – கட்டழகு
நூல் : பக்கம் : 116
802. முன்சப்தம் – எதிரொலி
நெடுந்தூரம் உயர்ந்த மலையில் பெரிய மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள சோலையில், தங்களிடம் பொருந்திய தெய்வத் தன்மையால் காண்பார்க்கு அச்சத்தையுண்டு பண்ணும் தெய்வப் பெண்கள் பலர் ஒன்று கூடி, சிறப்புற்று விளங்குகின்ற மலையிடமெல்லாம் எதிரொலி (முன் சப்தம்) உண்டாகும்படியாகப் பாடி ஆடுவர்.
மேற்படி நூல் : பக்கம் : 11
★
803. இலக்குமி – திருமகள்
804. இரத்தினங்கள் – மணிகள்
805. சடாட்சரம் – ஆறெழுத்து
806. திலகம் – பொட்டு
807. முத்திரை – அடையாளம்
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply