சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 – 813
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 797-807 – தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 – 813
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
808. புட்பாவதி – மலர் முகத்தம்மையார் (1938)
பேராசிரியர் மயிலை. சிவமுத்து அவர்களுக்கு முன் பிறந்த குழந்தையின் பெயர் புட்பாவதி என்பது. இந்த அம்மையார் இன்று மலர் முகத்தம்மையார் என்று அழைக்கப்படுகிறார். இவர் 1938 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டுத் தமிழ் மொழிக்காகச் சிறை சென்றவர்.
தமிழ்நெறிக் காவலர் பேராசிரியர் மயிலை சிவமுத்து நினைவு மலர்
மாணவர் மன்ற வெளியீடு, சென்னை.
★
809. சலசாட்சி – தாமரைக்கண்ணி (1938)
சலசாட்சி என்பவர் தமிழறிஞர் வல்லை பாலசுப்பிரமணியம் அவர்களின் துணைவியாராவார். சலசாட்சி என்னும் வடமொழிப் பெயரை நீக்கி, தூய தமிழில் தாமரைக் கண்ணி என்று பாற்றியமைத்தவர் பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்களாவார். திருமதி. தாமரைக் கண்ணி அம்மையார் 1938 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டுத் தமிழ்மொழிக்காகச் சிறைசென்றவரின் தெரியவராவார்.
★
810. உருத்திரம் – பெருஞ்சினம்
பொருள் என்பது யாதோ எனின், அகத்திற்கும் புறத்திற்கும் பொது என்பது. அகத்தைச் சார்ந்துவரும் பொருளெல்லாம் அகப்பொருள் எனப்படும். புறத்தைச் சார்ந்து வரும் பொருளெல்லாம் புறப்பொருள் எனப்படும். இச்சுவை வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம் (பெருஞ்சினம்), நகை, சாந்தம் என ஒன்பதாகும்.
நூல் : அகப்பொருளும் அருளிச்செயலும் (1938), பக்கம் : 5
நூலாசிரியர் : பிரபந்த வித்துவான்,
திருப்புறம்பயம் இராமசுவாமி நாயுடு
★
811. காந்தர்வ மணம்- களவொழுக்கம்
உலகின்கண் எல்லாச் சமயத்தாராலும், உலகத்தாராலும் வெறுக்கப்பட்ட களவொழுக்கத்தை எதற்காகக் கற்றல் வேண்டும். இங்குக் கூறும் களவொழுக்கம் (காந்தர்வமணம்) தீமை செய்யாது வீடு பயப்பது ஒன்றாகும்.
நூல் : பக்கம் : 19
★
812. வெள்ளை வாரணன் – வெண் கோழி (1938)
★
813. கிருட்டிணசுவாமி – வல்லிக்கண்ணன் (1535)
1930களிலும், 40களின் ஆரம்ப வருடங்களிலும், தேசீய உணர்ச்சியோடு விடுதலை முழக்கம் செய்யும் வேகமான எழுத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் பல தோன்றி, நடந்து, மறைந்து கொண்டிருந்தன. (உ)லோகசக்தி, பாரதசக்தி, என்ற பத்திரிகைகள் அப்படிப்பட்டவை.
அவற்றில் நான் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்களும் நிறையவே எழுதினேன், பலரது கவனத்தையும் அவை ஈர்த்தன.
அந்தச் சந்தர்ப்பத்தில் தான் எனக்கு ஒரு புனைபெயர் தேவை என உணர்ந்தேன். அதுவரை ரா. சு. கிருட்டிணசுவாமி என்றும், ராசுகி, என்றும்தான் எழுதிக் கொண்டிருந்தேன்.
கவிபாரதியார் தன் நண்பர் குவளையூர் கிருட்டிணமாச்சாரி என்ற பெயரைக் குவளைக் கண்ணன் என மாற்றியிருந்தது என் மனத்தில் பதிந்திருந்தது. அதே போல என் சொந்த ஊரான இராசவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருட்டிணசுவாமி என்பதைக் கண்ணன் என மாற்றி அதையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்று எனக்கு நானே சூட்டிக் கொண்டேன்.
நூல் : வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்
எடுத்து எழுதியவர் : ஏந்தல் இளங்கோ
இதழ் : தாய் – 22. 6. 1986
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply