(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003-1009- தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 – 1020

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

 1. Encyclopedia – பேரகராதி
  பல ஆயிரமாண்டுகட்கு முன்பே சீனர்கள் நாகரீகத்தில் முதிர்ச்சி பெற்று விளங்கினார்கள். இவர்கள் தொன்று தொட்டே பட்டு, காகிதம், வெடி மருந்து, அச்சுப் பொறி, திசைக்கருவிகள், கண்ணாடி முதலிய பலவகைத் தொழில்களில் முன்னேறி இருந்தார்கள். இவர்கள் சிற்பம், சித்திரம் இவற்றில் பெயர்போனவர்கள். உலகத்திலேயே மிகப்பெரிய பேரகராதி (Encyclopedia) முதன் முதலில் சீனாவில் தான் எழுதப்பட்டது.
  நூல் : சீனத்துச் செம்மல் (1952), பக்கம் – 6
  நூலாசிரியர் : புலிகேசி
 2. (உ)ரூபா – மாடு
  பெகுஸ் (pecus) என்ற லத்தீன் வார்த்தைக்கும், பெய்கு என்ற செருமன் வார்த்தைக்கும், (உ)ரூபா என்ற வடமொழி வார்த்தைக்கும், மாடு என்றே பொருள். (உ)ரூபா என்ற சொல்லே திரிந்து (உ)ரூபாய் எனத் தமிழில் வழங்குகிறது. (உ)ரூபா என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லாகத் தமிழில் மாடு என்ற சொல் வழங்கப் பெறுகிறது.
  நூல் : பணம் (1953) பக்கம் – 14
  நூலாசிரியர் : ரெ. சேஷாசலம், எம்.ஏ.,
  ⁠(ம. தி. தா. இந்துக் கல்லூரி பொருளாதார ஆசிரியர்)
 3. Refrigerator – குளிரச் செய்யும் பொறி
 4. Microscope – அணு நோக்கி
  விஞ்ஞானிகளுக்குத் தேவைப்படும் அணு நோக்கி பரிசோதனைப் பொறி (Testing Machine) மின்சாரச் சூளை அடுப்பு. ஆய்வுத் துலை (Analytical Balance) எக்சுரே பொறி, அல்ட்டுரா வயலெட்டு (ஊதா) ஒளிக் கதிர்கள் வீசும் பொறி, வெப்ப ஒளிக்கதிர் வீசும் பொறி (Heat – Ray), கண்ணாடி உருக்கும் பொறி, குளிரச் செய்யும் பொறி (Refrigerator),மற்றைய வீட்டியல் சிறு பொருள்கள், தண்ணீரை வெந்நீராக்கும் மின்சாரக் கருவி, மின்சார வீட்டடுப்பு, பல்புகள், பாதரச பல்புகள் முதலிய எல்லாப் பொருள்களும் சப்பானில் உற்பத்தியாகின்றன.
  நூல் : நான் கண்ட சப்பான் (1953), இரண்டாம் பதிப்பு
  ⁠பக்கம் : 65, 66
  நூலாசிரியர் : க. இராமசுவாமி நாயுடு, முன்னாள் மேயர், சென்னை.

 1. இரணியப் பிண்டம் – பொற்கட்டி
  இந்தியாவில் (இ)ரிக்குவேத காலத்திலேயே (சுமார் கி.மு. 2000) பொற்கட்டி, பணமாக உபயோகிக்கப்பட்டதாக அறிகிறோம் அது. இரணியப் பிண்டம் என்றழைக்கப்பட்டது. தமிழில் அதன் நேர் பொருள் பொற்கட்டி கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியார் இரணியனைப் பொன்னன் என்றே கூறுவர். ஆடகப் பெயரின் அவுணர் மார்பினன் என வரூஉம் குமர குருபரர் வாக்கும் (திருவாரூர் நான்மணிமாலை) ஈண்டு நினைவு கூறற்பாலது.
  நூல் : பணம் (1953), பக்கம் – 15
  நூலாசிரியர் : (இ)ரெ. சேசாசலம், எம்.ஏ.,
  ⁠(ம. தி. தா. இந்துக் கல்லூரி பொருளாதார ஆசிரியர்)

  1015.Under wear – உள் அங்கி
  ஃகிரோ ஃகிடோ – சப்பானிய சக்கிரவர்த்தி ஓர் உடையை ஒரு முறைக்கு மேல் மறுமுறை உபயோகப்படுத்துவதில்லை. உள் அங்கி கூட (Under Wear) மறுமுறை அணிவதில்லை.
  நூல் : தம்மி, 10.10.1953, பக்கம் :12, மலர் : இதழ் 2
  சொல்லாக்கம் : தில்லை வில்லாளன், பி.ஏ. (ஆனர்சு)
 2. புலவர் தி. நா. ஞானப்பிரகாசம் – அறிவு ஒளி
  முகவரி : 2 / 25 இணைவு – 2,
  பூங்குன்றனர் தெரு, மறைமலை நகர் – 603 209
 3. Axis – அச்செலும்பு
  இந்த 33 எலும்புகளில் ஒன்று அச்செலும்பு என்னும் பெயரும், இன்னொன்று உலகம் என்னும் பெயரும் பெற்றுள்ளனவே.
  நூல் : பழந்தமிழரும் முருகன், முக்கண்ணன் வணக்கமும் (1954)
  ⁠பக்கம் – 46
  நூலாசிரியர் : முனைவர் தி. இரா. அண்ணமலைப் பிள்ளை
 4. கமகங்கள் – அசைவுகள்
  நம் நாட்டவர்கள் சங்கீத விசயங்களுக்கு முதலிடம் கொடுத்தார்களே தவிர பாவனைகளைப் பற்றியோ, பாடல்களின் உச்சரிப்பைப் பற்றியோ சிந்தித்தார்களில்லை, அதனாலேயே நம் நாட்டுப் பாடல்களின் மெட்டில் பொதுமக்கள் கவர்ச்சி கொள்ளாமல் பிறநாட்டு மெட்டுகளையே அமைத்துக் கொண்டு பாடுவதும், ஆடுவதும் இரசிப்பதும் வழக்கத்தில் அதிகமாகி விட்டது. இதற்குக் காரணங்கள் நம் நாட்டுப் பாடல்களில், பதங்களைச் சரியாக உச்சரிக்காமையும், பதங்களைக் கேட்பவர்கள் புரிந்து கொள்ளதவாறு அதிகமான சங்கீதத்தின் அசைவுகளை (கமகங்களை) அளவுமீறி உபயோகப்படுத்துதலும் ஆகும்.
  நூல் : தென்னிந்திய இசை உலகம் (1954)
  ⁠பக்கங்கள் : 27, 28
  நூலாசிரியர் : எசு. மாணிக்கம் (தென் ஆப்பிரிக்கா)
 5. Lyric – தனிப்பாடல்
  நூல் : புதுமைப்பித்தன் கட்டுரைகள் (1954) பக்கம் 56,
  நூலாசிரியர் : புதுமைப்பித்தன்
 6. மயிலை சண்முக சுந்தரன் – மயிலை முத்தெழிலன்
  குழந்தைகளுக்காகவே வாழ்ந்த மயிலை சிவமுத்து அவர்கள் அன்புச் செல்வனே கவிஞர் மயிலை முத்தெழிலன் அவர்கள். சண்முக சுந்தரம் என்ற பெயரை மயிலை முத்தெழிலன் என்று 1954ஆம் ஆண்டில் இவர் மாற்றி வைத்துக்கொண்டார்.

  (தொடரும்)
  உவமைக்கவிஞர் சுரதா
  தமிழ்ச்சொல்லாக்கம்