சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 822-830
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 814-821– தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 822-830
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
822. வித்தாரகவி – அகலகவி
ஆசுமுதல் நாற்கவியும் என்றது ஆசுகவி, மதுரகவி, அதிரகவி, வித்தாரகவி என்று சொல்லப்பட்ட நான்கு விதமான கவிகளை என்க.
நூல் : கந்தர் கலிவெண்பா (1939)
நூலாசிரியர் : குமரகுருபர சுவாமிகள்
பதவுரை, பொழிப்புரை, விசேடவுரை, சு.கு. கோவிந்தசாமி பிள்ளை
★
823. பரமபதம் – வீட்டுலகம்
தலைவி கூற்றில் கண்ணன்விண் தோழிக்குவமை, கண்ணன் விண் – திருமாலின் வீட்டுலகம் (பரமபதம்); அதனையடைந்தவர்கள் அழிவின்றி வாழ்வார்கள்.
நூல் : கரந்தைக் கட்டுரைக் கோவை (1939)
கட்டுரை : திருவிருத்தம் பக்கம் 105
கட்டுரைாளர் : வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை
★
824. பாலசுப்பிரமணியன் – இளமுருகு (1939)
825. சமசுட்டி சட்டசபை – நடு மன்னவை
அஃதாவது, இந்தியாவின் நடு மன்னவை (சமசுட்டி சட்டசபை) யில் பல மாகாணத்தவரும் ஒன்றுகூடிப் பேச ஒரு பொதுமொழி வேண்டும்.
நூல் : இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1939), பக். 14
நூலாசிரியர் : வித்துவான் மறை. திருநாவுக்கரசு.
++++
826. பிருதுவி – மண்
827. சீ(ஷீ)ரம் – பால்
828. ச(ஜ)லம் – நீர்
829. ஆத்மா – ஆவி, உயிர்
830. அக்னி – நெருப்பு
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply