சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098-1120
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097 தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098-1120
(கவிஞர் சுரதா, கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
- அம்போதரங்கம் – நீரின் அலை
அம்போதரங்கம் (நீரின் அலை) அல்லது அசையடி – இது கடல் அலைகள் போல அடிகள் அளவடியாய் நிற்பது. - அசோரத்திரம் – இரவும் பகலும்
- அத்துவிதம் – இரண்டற்றது
- இலஞ்சம்ர் – கைக்கூலி
- காலேசு -கல்லூரி
- கைங்கரியம் – தொண்டு
- தரும சாத்திரங்கள் – உயர் நூல்கள்
- திரவிய சாலை – காசடக்குங் கூடம்
- பந்தம் – கட்டுப்பாடு
- பிரத்தியட்சம் – கண்கூடு
- வாதபுத்தகம் – வழக்குப் புத்தகம்
- உபநிடதம் – மறைமுடிவு
- (இ)ரப்பர் மரம் – பிசின் மரம்
நூல் : சிரீ இராமநாத மான்மியம்
நூலாசிரியர் : ச. பொன்னம்பல பிளளை
★ - இந்திர நீல ரத்தினம் – கார் தந்த மணி
- பீதாம்பரம் – மின்நூல் ஆடை
- விவிதம் – பலவகை, பலவிதம்
- பூமிசுதன் – செவ்வாய்
- வியோகம்-பிரிவு
- .பூர்வ பக்கம் – முதற்பக்கம்
- தாசி – அடியவள்
- வாளாம்பிகை – இளையவள்
- Defence – எதிர்க்கட்சி
- Sea Custom – கடல்வரி
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply