(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்: 851-864 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 865-880

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 

கி.பி.  1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. வருசம் – மரம்
  2. பூரண சந்திரன் – நிறை நிலா
  3. பிரயத்தநம் – முயற்சி
  4. நட்சத்திரம் – விண்மீன்கள்
  5. சமுத்திரம் – கடல்
  6. பஞ்சேந்திரம் – ஐம்பொறி
  7. ஆனந்தபாசுயம் – உவகை நீர்
  8. சியேசுட்ட புத்திரன் – மூத்தமகன்
  9. பௌத்திரன் – பேரன் (பெயரன் – பாட்டன் பெயரை உடையவன்)
  10. தேகசுரம் – மெய் வருத்தம்
  11. அட்சரப்பியாசம் – சுவடி தூக்குதல்
  12. (இ)ரக்தம் – செந்நீர்
  13. நயனம் – கண்
  14. ஈசுர சங்கல்பம் – திருவருட் குறிப்பு
  15. சிரசு – தலை
  16. புத்திரபாக்கியம், புத்திரோற்பத்தி – மகப்பேறு

நூல்        :               மோசூர் ஆலடிப் பிள்ளையார் புகழ்ப் பத்து – (1940)

                                மூலமும் உரையும்

நூலாசிரியர்         :               மோசூர் கந்தசாமி முதலியார், பி.ஏ., எம்.ஆர். ஏ.செ..

                                பச்சையப்பன் கல்லூரி

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்