சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 892-903
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 881-891 தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 892-903
(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
892. Cricket – துடுப்பு ஆட்டம்
893. Hockey – வளைகழி ஆட்டம்
894. Rugby – பிடி பந்தாட்டம்
895. Basket Bal l- கூடைப் பந்தாட்டம்
கேம்சு என்ற பகுதியில் துடுப்பு ஆட்டமும் (Cricket) வளைகழி ஆட்டமும் (Hockey), உதை பந்தாட்டமும் (Foot Ball), பிடி பந்தாட்டமும் (Rugby), சல்லடைப் பந்தாட்டமும் (Tennis), கூடைப் பந்தாட்டமும் (Basket Ball) இவை போல்வன பிறவும் அடங்கும்.
நூல் : மாணவர் தமிழ்க் கட்டுரை (1940), பக்கம் – 16
நூலாசிரியர் : வித்துவான், பாலூர், து. கண்ணப்ப முதலியார்
: (தமிழ் ஆசிரியர் முத்தியாலுப் பேட்டை உயர் கலாசாலை, சென்னை)
★
896. Suit case – தோல் பெட்டி
என் தந்தையாரும் யானும் துணிக்கடைக்குச் சென்று, எனக்கு வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டோம்; தற்காலப் பேரறிஞர்கள் எழுதிய ஆங்கிலப் புத்தகங்களையும், தமிழ்ப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டோம்; எனக்கு ஒரு தோல் பெட்டி (SuitCase) இல்லாதது ஒரு குறையாய் இருந்ததால், அதையும் வாங்கிக் கொண்டேன்.
நூல் : மாணவர் தமிழ்க் கட்டுரை (1940), பக்கம் – 160
நூலாசிரியர் : வித்துவான் பாலூர், து. கண்ணப்ப முதலியர்
(தமிழ் ஆசிரியர். முத்தியாலுப் பேட்டை உயர் கலாசாலை, சென்னை)
★
897.இன்தமிழ்
தமிழ்மொழி இனிமையானது என்று எல்லாரும் சொல்லுகிறார்கள். அதன் இனிமையை அறிந்தவர்கள் அதனை இன்தமிழ் என்று சொல்லக் கேட்கிறோம்.
நூல் : சங்கநூற் கட்டுரைகள் (1946), பக்கம் : 1
நூலாசிரியர் : தி. சு. பாலசுந்தரன் (இளவழகனார்)
(மறைமலையடிகள் மாணவர்)
★
898. அபிவியக்தமாக – வெளிப்படையாக
899. தானம் – இடுதல்
900. விநயம் – அடக்கம்
901. இலக்ஷணம் – குறி
902. இலக்ஷியம் – முறிக்கப்படுவது
903. விவகாரம் – உலக வழக்கு
நூல் : விவேக சிந்தாமணி வேதாந்த பரிச்சேதம் (1940)
(இரண்டாம் பதிப்பு)
விளக்கம் : தஞ்சை மாநகரம் வி. பிரம்மாநந்த சுவாமிகள்
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply