(தமிழ்ச்சொல்லாக்கம் 1-7 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

தமிழ்ச்சொல்லாக்கம் – : 8- 11

8. கமா (Kama)   – முனை கூட்டு

9. டேசு (Dash)   – சிறு கீற்று

10. பிராக்கெட்(டு) (Bracket)   – பெருங்கீற்று

11. முற்றுப் புள்ளி (Full stop) – குத்து

12. டபுள் பிராக்கெட்(டு) (Double Bracket)   – இருதலைப் பிறை

, இம்முனை கூட்டுச் சொல் முதலியவற்றின் பின்னும்,

– இச்சிறுகீற்றுச் சொற்களின் பிரிவுக்குப் பின்னும்,

− இப்பெருங்கீற்றுப் பதசாரத்துக்குப் பின்னும்,

( ) இவ்விருதலைப் பிறை வருவிக்கப்பட்ட சொற்களுக்கும், இக்குத்து முற்றுச் சொல்லுக்குப் பின்னும்,

[ ] இவ்விருதலைப் பகரந் தாத்பரியத்துக்கும்,

米 இத்தாரகை அடியிற் காட்டப்பட்டவற்றிற்கும் வைக்கப்பட்டன.

நூல்        நிசுட்டாநுபூதி மூலமும் உரையும் (1875 ஆகத்து) பக்கம் 2

உரையாசிரியர்   : முத்து கிருட்டிண பிரம்மம்.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்