தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 256-266
(தமிழ்ச்சொல்லாக்கம் 245 – 255தொடர்ச்சி)
(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
256. விசித்திரம் – பேரழகு
நூல் : அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி)
நூலாசிரியர் : கவித்தலம் துரைசாமி மூப்பனார்.
★
257. பிரசண்ட மாருதம் : பெருங்காற்று (1909)
இதழ் : செந்தமிழ், செளமிய ௵ மார்கழி, தொகுதி : 8 பகுதி : 2. பக்கம் – 71
கட்டுரையாளர் : வீராசாமி ஐயங்கார்
★
258. சந்திபாதம் – முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல்
259.அவதூதம் – புறங்கையாற் கீழே தள்ளுதல்
260. பரக்கேயணம் – இழுத்துத் தளளுதல்
261. முட்டி – கைகுவித்து இடித்தல்
262. கீலநிபாதம் – முழங்கை, கணைக்கைகளினால் இடித்தல்
263. வச்சிரநிபாதம் – கைவிளிம்புகளால் இடித்தல்
264. பாதோத்தூதம் – நடுவிரல் ஆழிவிரல் என்பவற்றினடுவே
பெருவிரல் வைத்துக் குத்தல், காலாற் றுக்கியெறிதல்
265. பிரமிருட்டம் – உடம்பெல்லாம் இறுகப் பிடித்துத் தள்ளியழக்குதல்
266. மற்போராவது : ஆயுதமின்றித் தத்தம் உடம்பினாற் செய்யும் போர்,
அது சந்நிபாதம், அவதூதம், பிரக்கேபணம், முட்டி, கீலபாதம், வச்சிரதிபாதம், பாதோத்துாதம், பிரமிருட்டம் என எண் வகைப்படும். இவை முறையே முதலிற் பிடித்துப் பஞ்சாப் போடுதல்.
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply