தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 333 – 339
(தமிழ்ச்சொல்லாக்கம்: 325- 332தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 333-339
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
333. சராசரம் = சரம் + அசரம் : அசையும் பொருள் அசையாப் பொருள்
334. கமனம் — நினைவு
335. கனடம்பம் — மிக்க பெருமை
336. பட்சண வர்க்கம் — பலவித சிற்றுண்டி
337. சரித்திரம் — வரலாறு
338. விவேகிகள் — மதியுள்ள பேர்
நூல் : வடிவேலர் சதகம் (1915)
நூலாசிரியர் : உடுமலைப்பேட்டை முத்துசாமிக் கவிராயர்
(திரைப்படப் பாடலாசிரியர் உடுமலை நாராயண கவியின் ஆசிரியர் )
★
339. Visitor’s Book-பார்வையீடு புத்தகம்
சிரீமான் காந்தியும் அவரது பாசாபிமானமும்: – சிரீமான் காந்தியவர்கள் சென்னைக்கு விசயம் செய்தபோது சிரீராமகிருட்டிண மாணவர் இல்லத்தைப் பார்க்கப் போயிருந்தனர். அங்குள்ள ஏற்பாடுகள் எல்லாவற்றையும் கண்டு திருப்தியடைந்து தம் அபிப்பிராயத்தை அங்குள்ள பார்வையீடு புத்தகத்தில் (visitors Book) குறிப்பிட்டார். சிரீமான் காந்தி ஆங்கிலத்தில் நிபுணரா யிருந்தயோதிலும் அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அபிப்பிராயங்க ளெல்லம் ஆங்கிலத்தில் இருந்தனவேனும் அவையொன்றையும் கவனியாதவர் போல் தம் அபிப்பிராயத்தைத் தாய்ப்பாசையாகிய குசராத்தியில் குறிப்பிட்டது பலருக்கு வியப்பை உண்டு பண்ணிற்று.
இதழ் : விவேக பேதினி (1915) தொகுதி, பகுதி 11 பக். – 409,
சொல்லாக்கம் : சி.வி. சாமிநாதையர்.
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply