(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1611-1620இன் தொடர்ச்சி)
1621. மேலோச்சு கருத்தியல்Dominant Ideology
1622. மையவிளிம்புநிலை அரசியல்Centre Periphery Politics
1623. மொத்தவியல்Grossology
1624. மொழி இயங்கியல்Physiology of language
1625. மொழிஒப்புமை யியல்Analogy linguistic
1626. மொழிக்காலவியல்
Glottochronology  – மொழிக்கால வரிசையியல், சொல்தொகைப் புள்ளியியல், சொல்தொகை வரலாற்றியல் என மூவகையாகச் சொல்லப்படுகின்றது. Glôtta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் நாக்கு, மொழி என்பன. சுருக்கமாக மொழிக்காலவியல் – Glottochronology எனலாம்.
Glottochronology
1627. மொழிப் பயனியல்
Pragmatics– செயல்துறை உறவு, நடைமுறையியல், சூழ் பொருளியல், நடைமுறைமை,  பயன்பாட்டியல், பயனீட்டுவாதம், பயன்வழியியல் எனப் பலவாறாகக் கூறப்படுகிறது. Pragmatics மொழியியல் சொல். Pragmatikos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு வினை, செயல் எனப் பொருள்கள். மேற்குறித்த யாவும் சரியே. ஆனால், எதன் செயல்? எதன் நடைமுறை? எதன் சூழல்? எதன் பயன்பாடு? எதன்பயனீடு என்ற வினாக்களுக்கு நேரடியாகச் சொல்லில் விடையில்லை. ஆதலின் பொதுவான நடைமுறை, பொதுவான பயன்பாடு என்பதுபோல் பொருள் கொள்ள நேரிடும். மொழியின் பகுதிகளான ஒலி, சொல், தொடர், பொருள் ஆகியனவற்றைப் பயன்படுத்தும் வினையைப்பற்றி ஆய்வதே இத்துறை. எனவே, மொழிப் பயனியல் – Pragmatics  எனலாம்.
Pragmatics of language
1628. மொழியியல்
Glottology– மொழி அறிவியல், மொழி வரலாற்றியல் எனப்படுகிறது glôtta என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள்கள் நாக்கு, மொழி என்பன. Linguistics என்பது மொழிகுறித்து அறிவியல் ஆய்வு. எனவே, ஒத்த பொருளுடைய இரண்டையும் மொழியியல் – Glottology / Linguistics எனலாம்.
Glottology / Linguistics
1629. மொழிவழிப் பண்டையஇயல்  
Linguistic Palaeontology– மொழிவழிப் பண்டைய இயல், மொழிவழிப் பண்பாட்டியல், மொழிவழிப் பண்பாட்டாய்வு, மொழியியல் பழங்காலவியல் எனச் சொல்லப்படுகின்றது. பண்பாட்டாய்வு மட்டுமல்லாமல் மொழி வரலாறு முதலியனவும் இதில் அடங்கும். எனவே, மொழிவழிப் பண்டைய இயல் – Linguistic palaeontology என்பது ஏற்கப்பட்டுக் குறிக்கப் பெற்றுள்ளது.  
Linguistic palaeontology
1630. மோப்பவியல்
olfactus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் முகர்தல்.
காண்க: மணவுணர்வியல்– Olfactology(1)   
Olfactology(2)

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000