இலங்கை வேந்தன் கல்லூரியின் 5 நாள் இயல் இசை நாடக விழா புதன்கிழமை தொடங்கும்
இலங்கை வேந்தன் கல்லூரியின் 5 நாள்
இயல் இசை நாடக விழா புதன்கிழமை தொடங்கும்
யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியின் இயல் இசை நாடக விழா சித்திரை 21, 2017 / மே 04 புதன்கிழமை அன்று தொடங்குகின்றது. தொடாந்து ஐந்து நாட்களுக்கு யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் நீராவியடிப் பிள்ளையார் கோவிலை இணைக்கும் கல்லூரி வீதியில் உள்ள இந்த மண்டபத்தில் இடம்பெறவுள்ள கலைவிழா மூன்றாவது தடவையாக இடம்பெறுகின்றது.
நுழைவு இலவசம் எனவும் யாழ். கலைஞர்களின் முயற்சிகளில் பங்கேற்று ஆதரவு நல்குமாறும் ஏற்பாட்டாளரான இலங்கை வேந்தன் க.இராதாகிருட்டிணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை வேந்தன் நாடகத்தில் நடித்த புகழால் கலை மீது ஆசை கொண்டு இவர் இந்தப் பிரமாண்டமான மண்டபத்தைக் கட்டியுள்ளார் என்பதுவும் கலைக்காக தன்னையே ஒப்படைப்பேன் என்ற ஓர் வெறியுடன் இந்த ஆண்டும் விழாவை முன்னெடுக்கின்றார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கன.
இயலுமானவர்கள் வருகை தந்து நிகழ்வுகளைக் கண்டு களியுங்கள். (புதன்கிழமை தொடக்க நிகழ்ச்சி மட்டும் தரப்பட்டுள்ளது.)
தரவு: இலலீசன் இலலீசன்
Leave a Reply