ஏழுதமிழர் விடுதலை : நூல் வெளியீடு- கருத்தரங்கம்- ஆவணப்படத் திரையிடல், சிதம்பரம்
கைது செய்தவர் சொல்கிறார்…உசாவல்(விசாரணை) அதிகாரிகள் சொல்கிறார்கள்..
தீர்ப்பளித்த நீதிபதி சொல்கிறார்..
உண்மை அறியும் குழு,
நீதிமன்றம் நியமித்த செயின்ஆணையம் சொல்கின்றன,
இவர்கள் ‘ குற்றமற்றவர்கள்(நிரபராதிகள்)’என்று!
மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.. ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள்…
நீதிபதிகள் சொல்கிறார்கள்..
மக்கள்நாயக ஆற்றல்கள், அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் எல்லாரும் ஒரே குரலில் சொல்கிறார்கள்,
இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று!
எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.. என்று திமிர்த்தனமாக
இவர்களின் உயிர்பறிக்க துடிக்கிறது இந்தியா!
காங்கிரசோ, பா.ச.க.வோ கெசுரிவாலோ யாராயினும் ஏழுதமிழர் விடுதலை செய்யக்கூடாது என்னும் அவர்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
காரணம் அவர்கள் இந்தியர்கள்!
சிக்கவைக்கப்பட்டவர்கள் தமிழர்கள்!
எந்த அடையாளத்தைக் கொண்டே ஏழுதமிழர் உயிர்பறிக்கவும், நம் இனத்தை அழிக்கவும் இந்தியா துடிக்கிறதோ அதே அடையாளத்தை நாம் கையில் ஏந்தி நிற்போம்.
ஆம்,
நாம் தமிழர்கள்.
நீதிகேட்க ஒன்று கூடுவோம் வாருங்கள்.
சித்திரை 11, 2047 / 24.4.2016 ஞாயிறு மாலை 5.30 : சிதம்பரத்தில்..
“ஏழுதமிழர் விடுதலை
உயர் நீதிமன்ற மறுப்பு
தமிழ்நாடு அரசு அதிகாரம்”
நூல் வெளியீடு- கருத்தரங்கம்- ஆவணப்படத் திரையிடலுக்குக் கட்டாயம் நண்பர்களுடன் வாருங்கள்!
– தோழமையுடன்
Leave a Reply